- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் படு கவர்ச்சியாக படங்களில் நடிக்காததற்கு அந்த ஒரு சம்பவம் தான் காரணம் - பல...

நான் படு கவர்ச்சியாக படங்களில் நடிக்காததற்கு அந்த ஒரு சம்பவம் தான் காரணம் – பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை வெளிப்படையாக சொன்ன நடிகை மீனா

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை மீனா. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், முரளி, கார்த்திக். பிரபு, சரத்குமார், பார்த்திபன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் மீனா.

மீனா நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் படங்களாக இருந்தன. குறிப்பாக எஜமான், முத்து, அவ்வை சண்முகி, பாரதி கண்ணம்மா, பொற்காலம், தாய்மாமன், செங்கோட்டை, நாட்டாமை என பல படங்களை சொல்லலாம். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை மீனா.

- Advertisement -

பல படங்களில் நடித்து வந்த மீனா, ஒரு கட்டத்துக்கு பிறகு குறிப்பிட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். மலையாளத்தில் இவர் மோகன்லாலுடன் நடித்த திரிஷியம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து திரிஷியம் 2 படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது திரிஷியம் 3 படத்தில், மோகன்லாலுடன் மீனா நடித்து வருகிறார்.

நடிகை மீனாவின் வாழ்வில் கடந்தாண்டில் மிகப்பெரிய துயரச்சம்பவம் நடந்தது. அவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இது மீனாவை மட்டுமின்றி, தமிழ் சினிமாத்துறையினரை பலத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும் ஆறு மாதங்களுக்கு மேல் சினிமாவில் நடிக்காமல் இருந்த மீனா, சில மாதங்களாக மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார்.

- Advertisement -

விரைவில் விஜய் டிவியில் துவங்க உள்ள புதிய நிகழ்ச்சி ஒன்றில் மீனா நடுவராக பங்கேற்க உள்ளார். அதற்கான பிரமோக்கள் வெளியான நிலையில், மீனா நடுவராக பங்கேற்கும் நிகழ்ச்சியை காண பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மீனா, நான் கவர்ச்சியாக நடிக்க விரும்பியதில்லை. ஆனால் ஒரு சிலர் முயற்சித்து பாருங்களேன் என்றனர். அதனால் எனக்கும் முயற்சித்து பார்க்கலாமே என்று தோன்றியது. அதனால் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடிக்க மேக்கப் அறைக்குள் சென்று, நீச்சல் உடையை அணிந்து கொண்டேன். ஆனால் அந்த ரூமை விட்டே என்னால் வெளியே வர முடியவில்லை. மிகவும் கூச்சமாக இருந்தது. அந்த சம்பவத்துக்கு பிறகு கவர்ச்சி நமக்கு வராது என முடிவு செய்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை மீனா.

- Advertisement -

சற்று முன்