தமிழ் சினிமா ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் என பல மொழி சார்ந்த சினிமா நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்களும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் பிறந்த நாளில் இன்று அவர் நடித்த படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் ஹவுஸ்புஃல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புஃல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. படையப்பா படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் படத்துக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்து விடுகிறது.
கடந்த 1999ம் ஆண்டில் வெளியான படையப்பா படத்தை இயக்கியவர் கேஎஸ் ரவிக்குமார். இந்த படத்தை சொந்தமாக தயாரித்தவர் நடிகர் ரஜினிகாந்த் தான். அவருடன் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தவர் பிஎல் தேனப்பன். ஆனால் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. அதனால் இப்போது படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அந்த படம் வசூல் செய்யும் மொத்த பணமும் நடிகர் ரஜினிகாந்தையே போய் சேரும்.
இந்நிலையில் இந்த படையப்பா படம் ரி ரிலீஸ் மூலமாக 10 கோடி ரூபாய்க்கு மேல் ரஜினிக்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பணத்தை நடிகர் ரஜினிகாந்த் தனக்காக எடுத்துக்கொள்ளப் போவது இல்லை. ரஜினிகாந்த் அறக்கட்டளை என்ற சேவை அமைப்பை நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த ரஜினிகாந்த் அறக்கட்டளைக்கு தான் படையப்பா ரீ ரிலீஸ் படத்தின் மொத்த வசூலும் போய் சேர உள்ளது.
சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் ரஜினிக்கு படையப்பா பங்கு தரும் வாய்ப்புள்ளதால் அந்த பணத்தை கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ஏழை ரசிகர்களுக்கு பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். வறுமையில் வாடும் ரசிகர்களுக்கு அந்த பணத்தில் உதவிகளை செய்யப் போகிறார். குறிப்பாக கல்வி உதவி, மருத்துவ உதவி போன்ற நிதியுதவிகளை செய்ய ரஜினிகாந்த் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





