தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் புகழப்படும் ஒரே தமிழ் ஹீரோ ரஜினி மட்டும்தான். இப்போது 75 வயதிலும் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினி இப்போது இருந்து வருகிறார்.
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் சொந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்த நாளை கொண்டாடினார். அன்று இரவு குடும்பத்துடன் திருப்பதிக்கு புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், திருமலை ஏழுமலையான் சுவாமியை வழிபட்டார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. ரஜினிக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை கூறியிருந்தனர்.
கடந்த 1999ம் ஆண்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் படையப்பா. இந்த படத்தில் நாயகனாக நடித்த ரஜினிகாந்த் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை அவரே எழுதியிருந்தார். மேலும் படையப்பா படத்தை ரஜினியே சொந்தமாகவும் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு அப்பாவாக சிவாஜி கணேசனும், வில்லியாக ரம்யாகிருஷ்ணனும் நடித்திருந்தனர்.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம் அப்போதே பல கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. இப்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி பிறந்த நாளில் கடந்த 12ம் தேதி படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படையப்பா ரி ரிலீஸ் செய்யப்பட்டது.
பிறகு ரசிகர்களின் அமோக வரவேற்பு காரணமாக 100 தியேட்டர்களின் எண்ணிக்கை அளவில் பல பகுதிகளில் அதிகரிக்கப்பட்டது. கடந்த 12ம் தேதி மறு வெளியீடு செய்யப்பட்ட படையப்பா ஒரு வாரத்தில் மொத்தம் ரூ. 17 கோடி வசூலை கடந்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. . ஆனால் 1999ம் ஆண்டில் உருவான படையப்பா படத்தின் பட்ஜெட் வெறும் ரூ. 5 கோடிதான் என்ற தகவலும் இப்போது வெளியாகி உள்ளது.





