- Advertisement -
Homeபொழுதுபோக்குகிட்டதட்ட இது அந்த மாதிரியான ஒரு படம் தான்… பன் பட்டர் ஜாம் படம் குறித்து...

கிட்டதட்ட இது அந்த மாதிரியான ஒரு படம் தான்… பன் பட்டர் ஜாம் படம் குறித்து விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ராஜூ டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். வீட்டுக்குள் இருந்த அவர் பெரும்பாலும் படுத்தே இருந்தார். எந்த டாஸ்க்கையும் சரியாக செய்ய மாட்டார். மிமிக்ரி செய்து நடிகர்கள் குரலில் பேசுவதும் கலாய்ப்பதுமான பொழுதை கழித்த அவர் பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஜெயித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மிக்சர் பார்ட்டி ராஜூ என்றும் இணையத்தில் அப்போது அவரை கலாய்த்தனர்.

இப்போது ராஜூ ஹீரோவாக நடித்த பன் பட்டர் ஜாம் என்ற படம் நேற்று ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, கதாநாயகன் கதாநாயகி இருவரது பெற்றோரும் குடும்ப நண்பர்கள். அதில் இரண்டு அம்மாக்களுமே என்ன நினைக்கிறார்கள் என்றால், நமது குழந்தைகள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என நினைத்து அவர்களை யதார்த்தமாக பழக விடுகிறார்கள்.

- Advertisement -

இருவரையும் காதலிக்க வைத்து திருமணம் செய்து விட்டால் லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ் ஆக மாறிவிடும். நமக்கும் திருப்தியாக இருக்கும் என திட்டம் போடுகிறார்கள். ஆனால் கதாநாயகன் ஒரு பெண்ணை விரும்புகிறார். கதாநாயகி இன்னொரு பையனை விரும்புகிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை.

வழக்கமாக படம் எடுப்பவர்கள் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படம் எடுப்பார்கள். அல்லது சிறுகதையோ நாவலோ அல்லது ஏதாவது ஒரு மொழி படத்தையோ காப்பி அடித்து படம் எடுப்பார்கள். ஆனால் இந்த டீம் மெகா சீரியலில் இன்ஸ்பயர் ஆகி படம் எடுத்திருப்பார்கள் போல. இன்னும் கொஞ்சம் டீடெய்லாக இந்த படத்தை எடுத்திருந்தால் இது கில்மா படமாகவே மாறி இருக்கும். கேட்டால் ஜென்-சி படம் அப்படித்தான் இருக்கும் என்பார்கள்.

- Advertisement -

படம் முழுக்கவே மெகா சீரியல் மாதிரி போய்க்கொண்டு இருந்தது. மெகா சீரியலில் தான் கதையாக ஆரம்பிக்கும் போதே 10, 15 கேரக்டர்களை அறிமுகம் செய்து வைத்துவிடுவார்கள். அதற்கு பின்னர் யாருடைய கால்சீட் உள்ளதோ அவர்களை வைத்து அந்த வாரத்து எபிசோடை தேத்தி விடுவார்கள். அது போல இந்த படத்தில் கதாநாயகன் ஒரு பெண்ணை காதலிக்கிறார். கதாநாயகி ஒரு பையனை காதலிக்கிறார். கதாநாயகனின் நண்பரின் காதல் கதை ஓடிக் கொண்டுள்ளது இது ஒரு கதை. இவர்களின் அப்பா அம்மாவுக்கு ஒரு கதை சொல்கிறார்கள்.

இந்த முழு படமும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்து போடுவதைப் போல்தான் உள்ளது. படத்தில் சீரியஸ்னஸ் டெப்த் என எதுவுமே இல்லை. இந்த கதையே போதுமான கதைதான். கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்திருந்தால் சுமாரான படமாகவாவது தேத்தி இருக்கலாம். ஆனால் நெருக்கியடித்து ஒரு கில்மா படத்திற்கு அருகில் கொண்டு வந்து விட்டார்கள் என்று ப்ளு சட்டை மாறன் பன் பட்டர் ஜாம் படத்தை கலாய்த்து விமர்சனம் செய்திருக்கிறார். இது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

- Advertisement -

சற்று முன்