- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரும் சேனை ஒன்று தேவை - சிவகார்த்திகேயனின் கோஷத்துடன் வெளியான பராசக்தி பிரமோ டீசர் -...

பெரும் சேனை ஒன்று தேவை – சிவகார்த்திகேயனின் கோஷத்துடன் வெளியான பராசக்தி பிரமோ டீசர் – ரிலீஸ் தேதியை அறிவித்த டான் பிக்சர்ஸ்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் ஒரே களத்தில் மோதுவது இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி விட்டது. பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸ் இன்று டீசர் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தரப்பில் திட்டவட்டமாக வருகிற ஜனவரி 10ம் தேதி என்று அறிவித்துள்ளனர். நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மோத வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு வந்தது.

- Advertisement -

இந்நிலையில், தற்போதைய இந்த அறிவிப்பு விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் பொங்கல் பண்டிகை களத்தில் கடும் போட்டி இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி விட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணியில் பராசக்தி படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் ரவி மோகன் மற்றும் முக்கிய கேரக்டரில் அதர்வா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஸ்ரீலீலா நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் குரு சோமசுந்தரம் பசில் ஜோசப் போன்ற முக்கிய நடிகர்களும் நடித்திருக்கின்றனர் கடந்த 1960 – 65ம் ஆண்டுகளில் மொழிப்போர் ஏற்பட்ட அந்த சூழலில் மதராஸ் மாகாணத்தில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி பராசக்தி படத்தின் திரைக்களம் உருவாகியுள்ளது.

- Advertisement -

ஆரம்பத்தில் பராசக்தி படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது ஜனவரி 10ம் தேதி பராசக்தி படம் வெளியாகும் என்ற பிரமோ டீசரை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் நிலையில், மறுநாளே ஜனவரி 10ம் தேதி பராசக்தி படம் வெளியாக உள்ளது.

சுமார் 30 நொடிகள் ஓடக்கூடிய பராசக்தி பிரமோ டீசரில், பெரும் சேனை ஒன்று தேவை என்ற கை உயர்த்திய கோஷத்துடன் சிவகார்த்திகேயன் தோன்றும் காட்சியும், பெரும் போராட்ட களத்தில் அதர்வா, ரவிமோகன் ஓடிவரும் காட்சிகளுடன் இந்த பிரமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

சற்று முன்