- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை சமாளிப்பது ரொம்பவும் கஷ்டம்… அந்த விமர்சனங்கள் அமரன் படத்தில் நடித்த போது கூட வந்தது...

அதை சமாளிப்பது ரொம்பவும் கஷ்டம்… அந்த விமர்சனங்கள் அமரன் படத்தில் நடித்த போது கூட வந்தது – நடிகர் சிவகார்த்திகேயன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, பராசக்தி என்ற பெயரே மிகவும் வலிமை வாய்ந்தது. அந்த பெயருக்கு தக்கபடி படமும் அதே அளவு தாக்கத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். 1960 காலகட்டத்திற்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை படம் அழைத்துச் செல்லும். மாணவர்கள் எப்போதுமே சக்தி வாய்ந்தவர்கள்.

மாணவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்த படம் அழுத்தமாக காட்டுகிறது. இந்த படத்தின் கரு குறித்து பல கருத்துகள் வெளி வருகின்றன. ஆனால் பலரின் தியாகங்களை நாம் இதில் நேர்மறையாகவும் மரியாதையாகவும் பதிவு செய்திருக்கிறோம். இந்த படம் ஸ்கிரிப்ட் புத்தகத்தை படிக்கச் சொன்னார்கள்.

- Advertisement -

இந்த படத்தை நான் கண்டிப்பாக செய்கிறேன். இன்று இரவில் ஸ்கிரிப்ட்டை படித்து முடித்து விடுவேன் என்று சொன்னேன். ஸ்கிரிப்ட்டை திறந்ததும் அது ஆங்கிலத்தில் இருப்பதை பார்த்து மீண்டும் கால் செய்து இதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும் என்றேன். இயக்குனர் சுதா கொங்கரா ரொம்பவே ஸ்ட்ரிக்ட் அப்படின்னு நிறைய பில்டப் பண்ணி ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தாங்க.

படப்பிடிப்பில் அவர் சீன்களை ஆங்கிலத்தில் தான் விளக்குவார். அதுவும் சேக்ஸ்பியர் ஆங்கிலம் மாதிரி. அதை நான் சரியாக பாலோ அப் பண்ண முடியல. நான் கெளதம் மேனன் சார் கூட வாழ்கிற மாதிரி உணர்கிறேன்னு சொன்னேன். அதற்கு பிறகு முழுக்க முழுக்க தமிழிலேயே விளக்க ஆரம்பிச்சிட்டாங்க. சுதாவிடம் இருந்து கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை நான் கற்றுக் கொண்டேன்.

- Advertisement -

ரவி மோகனை பார்த்தவுடன் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தது. அவரது எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அவரது உடை ஸ்டைல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் ரவிமோகன் நடிக்கிறார் என்றவுடன் நான் எது ஜெயம் ரவியா என ரியாக்ட் பண்ணிவிட்டேன். தனிஒருவன் படத்தில் அரவிந்த் சாமி எப்படி ஒரு பவர்ஃபுல் வில்லனாக வந்தாரோ, அதே மாதிரி பராசக்தி படத்தில் ரவி சார் ஒரு பவர்ஃபுல் வில்லனாக வருகிறார்.

நானும் ஜீவி பிரகாஷ் குமாரும் இணைந்த அமரன் படம் போல பராசக்தி படமும் நல்லா இருக்கும். அவர் இன்னும் நிறைய படங்கள் பண்ணனும். தாய் மண்ணுக்காக அமரன், தாய்மொழிக்காக பராசக்தி என்று சொல்லலாம். இன்னைக்கு சோசியல் மீடியாவை சமாளிக்கிறது பெரிய விஷயம். இதில் ஏஐ வேற வந்துடுச்சு. இந்த படத்தில் ஸ்ரீலீலா டான்ஸ் நல்லா இருக்கும். அரசியல் படம் பண்ணினாலும் ஆக்டிங் தான் எனக்கு வரும். இந்த மாதிரி மாறுபட்ட படங்கள் பண்ணலாமுன்னு ஆசைப்பட்டேன். எந்த கட்சி சார்ந்தும் படம் பண்ணியது இல்லை. அமரன் படம் பண்ணும் போது கூட இப்படி விமர்சனங்கள் வந்தன என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்