விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை பார்த்த யாராலும் போட்டியாளர் பாரு என்கிற வீஜே பார்வதியை மறக்கவே முடியாது. அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது முதல் கடைசியாக வெளியேறி நாள் வரை செய்த அட்ராசிட்டி அப்படிப்பட்டவை. அவரது பேச்சும் நடவடிக்கைளும் போக்கும் பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து விட்டது.
பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை யாருமே இந்த அளவுக்கு பிரச்னைகள் செய்ததும் இல்லை. இப்படி 2 பேர் ஜோடியாக ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய சம்பவம் பிக்பாஸ் இப்போதுதான் முதன்முறையாக நடந்துள்ளது. இதுவரைக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பல மொழிகளில் நடந்து வரும் பிக்பாஸ் சீசனில் ஒரு பெண் போட்டியாளருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை அதுவும் பார்வதிக்கு தான்.
சக போட்டியாளர்களை அலட்சியப்படுத்தி பிக்பாஸ் சொன்ன அறிவுரைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த பார்வதி ஒரு கட்டத்தில் தன் மோசமான குணத்தால் அதன் பலனை அடைந்தார். கடந்த சனிக்கிழமை நடந்த கார் டாஸ்க்கில் கம்ருதீனுடன் சேர்ந்துக்கொண்டு சாண்ட்ராவை காருக்குள் இருந்து எட்டி உதைத்து வெளியே தள்ளினார். இதையடுத்து அவர்கள் இருவரையும் ரெட் கார்டு காட்டி பிக்பாஸ் வெளியேற்றி விட்டார்.
தற்போது வெளியான தகவல்களின் படி பார்வதி கம்ருதீன் இருவருக்கும் பிக்பாஸ் வீட்டில் 90 நாட்கள் வரை இருந்த சம்பளம் எதுவுமே கிடைக்காது. அவர்கள் 12 வாரங்கள் இருந்த நிலையில் வாரம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் என்றாலும் பார்வதி கம்ருதீனுக்கு தலா 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வர வேண்டும். அத்துடன் பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க்குகளில் ஜெயித்ததற்கான போனஸ் சலுகைகள் இதர சலுகைகள் என எதுவுமே இருக்காது.
இனி பிக்பாஸ் சார்ந்த எந்த ஒரு விழா நிகழ்ச்சிகளிலும் அவர்கள் இருவரும் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது. டிவி சீரியல் நடிகரான கம்ருதீன் ஏற்கனவே கமிட் ஆகி இருந்த சில சீரியல்களில் இருந்தும் இந்த சம்பவத்துக்கு பிறகு அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து துரத்தப்பட்ட பார்வதியின் ரியாக்சன் இப்போது என்ன என்கிற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது. இப்போது அவரது அதிகாரபூர்வமான இன்ஸ்டாகிராமில் வரிசையாக ஸ்டோரிகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த பதிவில் பார்வதிக்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்களும் அவர்கள் பேசிய வீடியோக்களும் வரிசையாக இடம்பெற்றுள்ளன. இதைப் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் வெளியே வந்தும் பார்வதி இன்னும் திருந்தலை. ரசிகர்கள் தனக்கு ஆதரவாக சொன்ன கருத்துக்களை மட்டும் பதிவிட்டு தன்னை மிகவும் நல்லவராக காட்டிக் கொள்கிறாரே, எவ்வளவு அசிங்கப்பட்டாலும் பார்வதி திருந்த மாட்டாரா என்று திட்டி வருகின்றனர்.





