- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாத்துறை சார்பில் முதல்வர் விஜய்க்கு விரைவில் பாராட்டு விழா? திரையுலக ஜாம்பவான்களை இழந்த துக்கத்தில்...

தமிழ் சினிமாத்துறை சார்பில் முதல்வர் விஜய்க்கு விரைவில் பாராட்டு விழா? திரையுலக ஜாம்பவான்களை இழந்த துக்கத்தில் ரசிகர்கள் – இந்த விழாவுக்கு முதல்வர் ஓகே சொல்வாரா?

- Advertisement -

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செல்வி ஜெயலலிதா கலைஞர் கருணாநிதி கேப்டன் விஜயகாந்த் வரிசையில் தமிழ் சினிமாவில் அரசியல் கட்சி துவங்கி முதல்வராக பதவிக்கு வந்தவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கி இரண்டு ஆண்டுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜய். கடந்த சில வாரங்களாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அப்போது அவரிடம் திரைத்துறை சார்ந்த பல்வேறு கோரிக்கை மனுக்களையும் அளித்து வருகிறார்கள். முதல்வர் விஜய் இயக்குனர்கள் பாரதிராஜா பாக்யராஜ் மறைவின் போது அந்த துக்க நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். மற்றபடி எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியிலும் முதல்வர் விஜய் கலந்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த சினிமா சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கம் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் பெப்சி உள்ளிட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து இதற்கு அனுமதி பெறும் வேலையில் தீவிரமாக இருந்து வருகிறார்கள். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சினிமா சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்த முதல்வர் விஜய் ஓகே சொல்வாரா என்பது சந்தேகமாக உள்ளது.

பாராட்டு விழா வேண்டாம் என்று மறுப்பாரா அல்லது கொஞ்ச நாள் போகட்டும் என்று தள்ளி வைப்பாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தமிழ் சினிமா தவிர அந்த பாராட்டு விழாவில் தெலுங்கு கன்னடம் மலையாளம் சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகராக இருந்த போது முதல்வர் விஜயுடன் பணி செய்த பல்வேறு மொழிகளை சேர்ந்த கலைஞர்களையும் அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழாவை மிக பிரமாண்டமாக நடத்தவும் திட்டம் உள்ளது.

- Advertisement -

இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்று நடத்தப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சினிமா நூற்றாண்டு விழாவுடன் இணைந்து பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த ஸ்டாலின் சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொண்டது இல்லை. இளையராஜா சிம்பொனி விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் மட்டுமே அன்றைய முதல்வர் ஸ்டாலின் பங்காற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் முதல்வர் விஜய் இப்போது தமிழ் திரைப்பட துறை சார்பில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு ஓகே சொல்வாரா அல்லது இயக்குனர்கள் பாரதிராஜா பாக்யராஜ் போன்றவர்கள் திரையுலக ஜாம்பவான்கள் மறைவுக்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் சோகமாக உள்ள இந்த சூழலில், அப்படி ஒரு பாராட்டு விழா அவசியம் இல்லை என்று தீர்மானிப்பாரா என்பதற்கு விரைவில் விடை தெரிந்து விடும்.

- Advertisement -

சற்று முன்