- Advertisement -
Homeபொழுதுபோக்குநெல்சன் காட்டுல இனி மழைதான், ஜெயிலர் வெற்றியால் அடித்த லாட்டரி, அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவுன்னு...

நெல்சன் காட்டுல இனி மழைதான், ஜெயிலர் வெற்றியால் அடித்த லாட்டரி, அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சா அரண்டுப்போய்டுவீங்க?

- Advertisement -

இயக்குனர் நெல்சன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் சரியாக போகவில்லை என்றபோது அவரை சமூக வலைத்தளங்களில் பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். ஆதலால் தனது அடுத்த திரைப்படமான “ஜெயிலர்” திரைப்படத்தில் நிச்சயம் பந்தயம் அடிக்க வேண்டும் என முடிவெடுத்தார் நெல்சன்.

அதன் படி தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார் நெல்சன். “ஜெயிலர்” திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.500 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்தின் வசூலை முறியடித்துள்ளது “ஜெயிலர்” திரைப்படம்.

- Advertisement -

நெல்சனுக்கு மட்டுமல்லாது ரஜினிகாந்தின் கெரியரில் ஒரு முக்கிய திரைப்படமாக “ஜெயிலர்” திரைப்படம் அமைந்துள்ளது. அதாவது ரஜினிகாந்த் இதற்கு முன்பு நடித்த “தர்பார்”, “அண்ணாத்த” ஆகிய திரைப்படங்கள் சரியாக போகவில்லை.

இதனிடையே ரஜினிகாந்தின் போட்டி நடிகரான கமல்ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தின் மூலம் மாஸ் ஹிட் அடித்தார். இந்த வெற்றியை முறியடிக்க வேண்டிய நிலையில் ரஜினிகாந்த் இருந்தார். அதன்படி ரஜினிகாந்தும் நெல்சனுடன் இணைந்து பந்தயம் அடித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

- Advertisement -

“ஜெயிலர்” திரைப்படத்தை நெல்சன் இயக்கியபோது 30 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் “பீஸ்ட்” திரைப்படத்திற்கு வந்த விமர்சனங்கள் காரணமாக 22 கோடிதான் கொடுக்கப்பட்டதாம்.

இப்போது “ஜெயிலர்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆகியுள்ள நிலையில், நெல்சனின் அடுத்த திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாம். மேலும் இந்த திரைப்படத்திற்கு 55 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். இவ்வாறு “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் நெல்சன் ஜாக்பாட் அடித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும்.

- Advertisement -

சற்று முன்