- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு எதிராக சாட்டை சுழற்ற ஆரம்பிக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்… சலசலப்புகளுக்கு அஞ்சுவாரா தளபதி? -...

விஜய்க்கு எதிராக சாட்டை சுழற்ற ஆரம்பிக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்… சலசலப்புகளுக்கு அஞ்சுவாரா தளபதி? – அடுத்தடுத்த மேடைகளில் பதில் தருவாரா?

- Advertisement -

பொதுவாக சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலே, கூத்தாடிகளுக்கு நாட்டை ஆளத் தெரியுமா என்பதுதான் முதலில் எழும் கடும் விமர்சனமாக இருந்திருக்கிறது. புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கும் அந்த கேள்வி இருந்தது. நடிகர் கமலுக்கும் அந்த கேள்வி வந்தது. கேப்டன் விஜயகாந்தும் அந்த கேள்வியை சந்தித்தார். இப்போது நடிகர் விஜயும் அந்த கேள்வியை எதிர்கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இருந்து பல பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வந்தனர். குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கே பாக்யராஜ் டி ராஜேந்தர் சரத்குமார் கமல்ஹாசன் மன்சூர் அலிகான் கர்ணாஸ் நவரச நாயகன் கார்த்திக் என மக்களிடம் வரவேற்பு பெற்ற இந்த நட்சத்திரங்களால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவருக்கு பிறகு கேப்டன் விஜயகாந்த் இருவரும்தான் அரசியலுக்கு வந்து பெரிய வரவேற்பை அமோக வரவேற்பை தமிழக மக்களிடம் இருந்து பெற்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக நடிகர் விஜயகாந்த் அரசியலில் முதல்வர் இடத்துக்கு வர முடியாமல் மறைந்து விட்டார். இப்போது நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக இறங்கி இருக்கிறார். இவருக்கான மக்கள் ஆதரவு, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகளில் தெரிந்து விடும்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை தற்போது உள்ள எந்த அரசியல் கட்சியுமே இதுவரை ஆதரிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி சீமான் பகிரங்கமாகவே விஜயை எதிர்த்து வருகிறார். சமீபமாக திமுகவும் விஜய் குறித்து விமர்சித்து பேச ஆரம்பித்து விட்டது. சமீபத்தில் கே பாக்யராஜ் கருணாஸ் வடிவேலு போன்றவர்களும் விஜய்க்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளனர்.

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ள நிலையில், விஜய் பேசும் இடங்களில் எல்லாம் நடிகர் கமல்ஹாசனை பேச வைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்கு கமலும் சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது. விஜய்க்கு தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் தாடி பாலாஜி மட்டுமே ஆதரவாளராக இருந்து வருகிறார். விஜயின் தோழி நடிகை திரிஷாவும் கூட இன்னும் தனது ஆதரவை பகிரங்கமாக விஜய்க்கு தெரிவிக்கவில்லை.

நடிகர் விஜய் குறித்த எதிர்கட்சிகள் மற்றும் நடிகர்களின் எதிர்மறை விமர்சனங்களால் அரசியல் களத்தில் சலசலப்பு அதிகரித்து வருகிறது. விஜய் பங்கேற்கும் அடுத்தடுத்த மேடைகளில் அவர்களுக்கு சுடச்சுட பதில் தந்து அரசியல் களத்தை விறுவிறுப்பாக்குவாரா, அல்லது தேர்தல் களத்தில் மக்களே அதற்கு பதில் சொல்லட்டும் என அரசியல் பணிகளை தளபதி கவனிப்பாரா என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்