தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை விளங்குகிறார். இவர் மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராகவும் போட்டியிட்டு இருக்கிறார். இந்திய குடிமையியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்தார்.
காவல் தலைமை கண்காணிப்பாளர், காவல்துறை ஆணையராக பணிபுரிந்த அவர், 2020 ஆம் ஆண்டு தனது பணியை உதறிவிட்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து அக்கட்சிக்கு ஆதரவாக வேலை செய்து வந்த அண்ணாமலை, எல் முருகன் எம்பியாக அறிவிக்கப்பட்டதும், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வி அடைந்தார். இந்த சூழலில், அண்ணாமலையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் இதில் அண்ணாமலையாக விஷால் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
விஷால் தற்போது ரத்னம் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஹரி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை மிஷ்கின் எடுத்திருந்தார். இரண்டாம் பாகத்திற்கான சூட்டிங் வெளிநாட்டில் நடைபெற்ற போது, இயக்குனருக்கும் நடிகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக விஷாலை பொதுவெளியில் மிஸ்கின் திட்டினார். அவர் ஒரு பொறுக்கி என்றும் கூறி அதிர்ச்சியூட்டினார். இதனால், பாதியில் நிற்கும் படத்தை விஷாலே நீ இயக்கும் முடிவு எடுத்து இருக்கிறார்.
இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு அவர், முத்தையா உடன் இணைய இருக்கிறார். மருது திரைப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. இதன் நடுவே அவர் அண்ணாமலை படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. இதன் இயக்குனர் யார் என்று இதுவரை தெரியவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் விரைவில் அப்டேட்டுடன் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





