- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம் - விஜய்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம் – விஜய் பட நாயகியை டைரக்டர் கமிட் செய்ய இதுதான் காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான முகமூடி என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜீவா நடித்திருந்தார். வில்லனாக நடிகர் நரேன் நடித்திருந்தார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனால் நாயகியாக நடித்த பூஜா ஹெக்டே பெரிய கவனமும் பெறவில்லை.

அதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி சினிமா பக்கம் சென்ற நடிகை பூஜா ஹெக்டேவிற்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. அங்கு பல படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக அவர் மாறினார். அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

- Advertisement -

அந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வணிக ரீதியாக வசூலை வாரி குவித்தது. அதைத் தொடர்ந்து ரெட்ரோ படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். அந்தப் படமும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை.

அதைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். ஆனால் இந்த படமும் அப்படி ஒன்றும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. விஜய் ரசிகர்களுக்கான ஒரு படமாக மட்டுமே உள்ளது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் மோனிஷா என்ற பாடல் காட்சியில் மட்டும் பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியிருந்தார். அந்த பாடல் காட்சியும் வைரலானது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு நடிகர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு புதிய படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவை லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் செய்திருக்கிறார். பூஜா ஹெக்டே மிகப்பெரிய நட்சத்திர நடிகையாக இருந்தும் கூலி படத்தில் மோனிஷா பாடலுக்கு ஆட வருமாறு லோகேஷ் கனகராஜ் கேட்டவுடன் உடனே சம்மதித்தார்.

அவர் ஒரு முன்னணி நடிகையாக நட்சத்திரமாக இருந்தும் லோகேஷ் கனகராஜ் கேட்டவுடன் அந்த குத்தாட்ட பாடல் காட்சியில் வந்து நடித்துக் கொடுத்ததால் அவர் மீது தனி அபிமானம் கொண்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்த நன்றியின் அடையாளமாக அல்லு அர்ஜூன் படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க கமிட் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்