- Advertisement -
Homeபொழுதுபோக்குடிசி படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு, 2ம் பாகமாக உருவாக வாய்ப்பிருக்கிறதா? - சன் பிக்சர்ஸ்...

டிசி படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு, 2ம் பாகமாக உருவாக வாய்ப்பிருக்கிறதா? – சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்த அதிரடி ஆக்சன்!

- Advertisement -

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ முன்னணி நட்சத்திர நடிகர் அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் பல படங்களில் நடிக்க வேண்டும். பல வெற்றிப் படங்களை கொடுக்க வேண்டும். ரசிகர்களின் பேராதரவை பெற வேண்டும். அப்போதுதான் அவருக்கு முன்னிலை அந்தஸ்து சினிமாவில் கிடைக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் ஒரு ஹிட் கொடுத்து விட்டால் ஒரு இயக்குனர் ஸ்டார் ஆகி விடுகிறார். ஒரு ஹிட் படத்தில் நடித்து விட்டால் ஹீரோ ஸ்டார் ஆகி விடுகிறார். அதற்கு உதாரணமாக நடிகர் பிரதீப் ரங்கநாதனை சொல்லலாம். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை சொல்லலாம். குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜை சொல்லலாம்.

- Advertisement -

மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து இயக்கிய கைதி படமும் விக்ரம் படமும் பெரிய ஹிட் கொடுத்தன. தொடர்ந்து மாஸ்டர் லியோ கூலி படங்களை டைரக்ட் செய்தார். எல்லாமே திரை முழுக்க இரத்தம் தெறிக்கும் வன்முறை படங்கள்தான்.

படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்கள் முகத்தை தடவி பார்த்து இரத்தம் எதுவும் தெறித்திருக்கிறதா என்று பயப்படும் அளவுக்கு கசாப்பு கடைக்குள் வந்து சென்ற மனநிலை தான் பலருக்கும் இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட மசாலா படங்களை இயக்கும் டைரக்டர்கள்தான் இன்றைய தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனர்கள், அறிவாளி இயக்குனர்கள் என்று கருதப்படுகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக ஹீரோவாக அறிமுகமான படம் டிசி. கேப்டன் மில்லர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய படம்தான் டிசி. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படமும் முழுக்க முழுக்க ஆக்சன் படம்தான். படம் முழுவதும் இரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளே அதிகம்.

எனினும் இந்த படத்துக்கும் ஜென்ஸி கூட்டம் பெரிய வரவேற்பை தந்ததால் பெரிய வசூலை குவித்து வணிக ரீதியாக நல்ல லாபம் தந்து வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன், ஹீரோ லோகேஷ் கனகராஜை அழைத்து இதே காம்போவில் இன்னொரு படம் செய்வோம் என்று கமிட் செய்துள்ளது. அது டிசி படத்தின் 2ம் பாகமாக கூட உருவாகலாம். விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்