- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68-ல் அஜித் இல்லையாம்... ஒத்த தலைக்கு பதிலாக இரண்டு முக்கிய ஹீரோக்களை வளைத்து போட...

தளபதி 68-ல் அஜித் இல்லையாம்… ஒத்த தலைக்கு பதிலாக இரண்டு முக்கிய ஹீரோக்களை வளைத்து போட திட்டமிடும் வெங்கட் பிரபு…

- Advertisement -

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தில், திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப் என மிகப் பெரிய இயக்குனர் பட்டாளமே லியோவில் இணைந்துள்ளது.

இதுபோக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடன இயக்குனர் சாண்டி, நடிகைகள் பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின் உள்ளிட்டோரும் லியோவில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்டார் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னை பகுதிகளில் நடைபெற்றது.

- Advertisement -

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தில், நா ரெடி தான் பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்தது. இதே போல் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கிளிம்ப்ஸ் வீடியோக்களையும் படக்குழு வெளியிட்டது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் நிலையில், லியோவை ரிலீஸ் செய்வதற்கான போஸ்ட் ப்ரோடக்சன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, தளபதியின் அடுத்த திரைப்படத்திற்கான வேலைகளும் விறுவிறுப்படைந்துள்ளன. தளபதி 68 திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை, வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

- Advertisement -

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த கூட்டணி குறித்து, நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில் விஜய் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், தந்தை விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இது மட்டுமல்லாமல், விஜய்க்கு சகோதரர் கதாபாத்திரத்தில் ஜெய் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஏற்கனவே தளபதி 68 திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடிப்பதாக பேசப்பட்டது. ஒருவேளை அதில் அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அதனை முற்றிலுமாக மறுத்து இருக்கிறார் வெங்கட் பிரபு. அதேசமயம், விஜய் உடன் பிரபுதேவா மற்றும் மாதவன் இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்திருக்கும் விஜய் ரசிகர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்