- Advertisement -
Homeபொழுதுபோக்குஜாலியோ ஜிம்கானா படத்தில் இப்படி ஒரு கேரக்டரில் நடிகர் பிரபுதேவா நடித்திருக்கிறாரா? இது கமல் படத்தில்...

ஜாலியோ ஜிம்கானா படத்தில் இப்படி ஒரு கேரக்டரில் நடிகர் பிரபுதேவா நடித்திருக்கிறாரா? இது கமல் படத்தில் அவர் நடித்த கேரக்டராச்சே? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் சுந்தரம் பிரபலமானவர். அவரது மகன்கள் ராஜூ சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத். இவர்களும் நடன கலைஞர்கள்தான். எனினும் ராஜூ சுந்தரம், பிரபுதேவா அளவுக்கு நாகேந்திர பிரசாத் பெரிய அளவில் புகழ் பெறவில்லை. ஆனால் டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என அசத்தி கொண்டிருப்பவர் பிரபுதேவா.

விஜய் நடித்த போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா, அக்‌ஷய் குமார் நடிப்பில் போக்கிரி படத்தை இந்தியிலும் இயக்கி வெற்றி பெற்றவர். தேவி, சார்லி சாப்ளின், குலேபகாவலி, காதலா காதலா, விஐபி, ராசய்யா, 123 காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.

- Advertisement -

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ஜாலியோ ஜிம்கானா படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மடோனா செபாஸ்டியன், யோகி பாபு, ரோபோ சங்கர், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா இறந்துபோன சடலமாக நடித்திருக்கிறார். இது படம் பார்த்த ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் வன்முறை, சாதியை மையப்படுத்திய படங்களாக பெரும்பாலும் இருக்கின்றன. டெட் பாடி அதை தூக்கிச் செல்லும் ஹீரோவை மையப்படுத்திய கதைதான் இது. இந்த படத்தின் கதையை கேட்டவுடன் பிரபுதேவா ஓகே சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

- Advertisement -

பின்பு அவரை மையப்படுத்தி 4 ஹீரோயின்களை படத்தில் கொண்டு வந்தோம். ஒன்றரை நாளில் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த கேரக்டரில் பிரபு தேவா நடிக்கும் போது அவருக்கு முன்னாடி பலரும் காமெடி செய்து கொண்டிருப்பார்கள். அதெல்லாம் கட்டுப்படுத்திதான் அவர் சிறப்பாக இந்த படத்தில் டெட்பாடியாக நடித்திருக்கிறார்.

ஜாலியோ ஜிம்கானா படம் ஒன்றரை நாளில் நடக்கும் இந்த கதையில் பிரபுதேவா 110 நிமிடங்கள் டெட்பாடி கேரக்டரில் நடித்துள்ளார். இது ஒரு சாதனையாகும். இதற்கு முன்பு கமல்ஹாசன் தயாரித்த மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் சார் நடித்தது ஒரு போர்ஷன்தான். ஆனால் பிரபுதேவா முழு படத்திலும் அப்படி நடித்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இப்போது இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்