- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அதர்வாவுக்கு அப்பாவாக நடிக்க தயாரான பிரபல நடிகர் - இது கொஞ்சம் ஓவரா தெரியுதே?...

நடிகர் அதர்வாவுக்கு அப்பாவாக நடிக்க தயாரான பிரபல நடிகர் – இது கொஞ்சம் ஓவரா தெரியுதே? அப்பா வயசா அவருக்கு என கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் முரளி மகன் அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஈட்டி சண்டி வீரன் 100 கணிதன் பரதேசி பராசக்தி டிஎன்ஏ ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் டிரிக்கர் குறுதி ஆட்டம் தள்ளிப் போகாதே நிறங்கள் மூன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மறைந்த அவரது அப்பா நடிகர் முரளி போல மகன் அதர்வா பெரிய அளவில் சினிமாவில் வரவேற்பை பெற முடியவில்லை. ஆனால் பரதேசி சண்டி வீரன் 100 டிஎன்ஏ போன்ற படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பரதேசி படத்தில் அதர்வா மிக அற்புதமான நடிப்பை தந்திருந்தார்.

- Advertisement -

இப்போது அதர்வாவின் தம்பி அதாவது முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளியும் நடிக்க வந்து விட்டார். அவர் நேசிப்பாயா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்தும் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். எனினும் அதர்வா பெரிய அளவில் தமிழ் சினிமாவில் இன்னும் நட்சத்திர அந்தஸ்தை பெறுவதற்காக போராடி வருகிறார்.

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அதர்வா ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். இவர் கூலி படத்தில் நடிகர் ரஜினியுடன் காளீசன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் உபேந்திரா போன்ற மாபெரும் கலைஞரை லோகேஷ் கனகராஜ் வீணடித்து விட்டதாக கூலி படம் பார்த்த ரசிகர்கள் புலம்பியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே அதர்வா நடிக்கும் படம் குறித்த ஒரு முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் அதர்வாவின் அப்பா கேரக்டரில் நடிகர் பிரபுதேவா நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். நடன இயக்குனர் நடிகர் இயக்குனர் என வலம் வந்த பிரபுதேவா அப்பா கேரக்டரில் நடிப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலத்த ஆச்சரியத்தை தந்துள்ளது.

வழக்கமாக ஜெய் கணேஷ் டெல்லி கணேஷ் மௌலி மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜன் கே பாக்யராஜ் பிரபு போன்றவர்கள் அப்பா கேரக்டரில் நடித்தால் அது பார்ப்பதற்கு தோதாக இருக்கும். ஆனால் பிரபுதேவா, அதர்வாவுக்கு அப்பாவாக நடித்தால் அது பொருத்தமாக இருக்குமா, அப்பா கேரக்டர் அவருக்கு பொருந்துமா, அதற்குள் பிரபுதேவாவுக்கு அதர்வாவுக்கு அப்பாவாக நடிக்கும் அளவுக்கு வயதாகி விட்டதா என்று ரசிகர்கள் இப்போதே கலாய்க்க துவங்கி விட்டனர்.

- Advertisement -

சற்று முன்