- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு ட்ரெய்லரில் இத்தனை பஞ்ச் வசனங்களா... பட்டையைக் கிளப்பும் டியூட் முன்னோட்டம்... அப்புறம் என்னப்பா ஒரு...

ஒரு ட்ரெய்லரில் இத்தனை பஞ்ச் வசனங்களா… பட்டையைக் கிளப்பும் டியூட் முன்னோட்டம்… அப்புறம் என்னப்பா ஒரு பிளாக்பஸ்டர் பார்சல்…

- Advertisement -

அடுத்தடுத்து மூன்று வெற்றி திரைப்படங்களைக் கொடுத்து, தமிழ் சினிமா மார்க்கெட்டில் உச்சம் தொட்டு இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதில் முதல் திரைப்படமான கோமாளியை அவர் இயக்கியிருந்தார். இரண்டாவது திரைப்படமான லவ் டுடேவில் இயக்கி நடித்திருந்தார். டிராகன் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டும் அவர் நடித்தார்.

இதில் லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றன. குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை கொடுத்து திரையரங்கு விநியோகஸ்தர்களால் கொண்டாடப்பட்டன. தியேட்டர் உரிமையாளர்களும் பிரதீப் ரங்கநாதன் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதாக கூறி வந்தனர்.

- Advertisement -

இப்படியான சூழலில் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறை அவர் டியூட் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவியாளராக இருந்த கீர்த்தீஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மலையாள நடிகை மமீதா பைஜு நாயகியாக வருகிறார்.

படத்தில் சரத்குமாருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் பிரதிப் ரங்கநாதனின் மாமாவாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான ஊறும் பிளட் பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. பலரும் சாய் அபயங்கரின் இசை நன்றாக இருப்பதாக தெரிவித்தார்கள். வரும் 17ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில் அதற்கான முன்னோட்டம் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த வகையில் ஜாலியாக இந்த ட்ரெய்லரை கட் செய்து இருக்கிறார்கள் படக்குழுவினர். குறிப்பாக ட்ரெய்லரில் பிரதீப் ரங்கநாதன் பேசும் ஒவ்வொரு பஞ்ச் டயலாக்குகளும் கவனத்தை ஈர்க்கின்றன. அடுத்தவனின் பீலிங்ஸ், இங்கு க்ரிஞ்ச் ஆகத்தான் தெரியும், ஒரு விஷயத்தை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்தால், வாழ்க்கையும் லெஃப்ட் ஹேண்டில் தான் டீல் செய்யும் உள்ளிட்ட வசனங்கள் கவனம் பெற்றுள்ளன.

மிக முக்கியமாக, திருமணம் மற்றும் தாலி சென்டிமென்டை இந்த திரைப்படம் பேசுவது, படத்தின் ட்ரெய்லரிலேயே நன்றாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக தாலிக்கு எந்த மரியாதையும் இல்லை அதற்கு பின்னாடி இருக்கிற பொண்ணோட ஃபீலிங்ஸ்க்குதான் மரியாதை என பிரதீப் ரங்கநாதன் பேசும் வசனம், படத்தின் மையக் கருவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பலரும் டியூட் திரைப்படத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்