கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். அதன்பிறகு லவ் டுடே என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அந்த படத்தில் அவரே நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
அதன்பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இந்த படமும் சூப்பர் ஹிட் படமாக ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக மாறிவிட்டார்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்ற படத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் டியூட் என்ற படத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள டியூட் படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
டியூட் படத்தில் இருந்து இதுவரை 3 சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படமும் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 120 கோடி என்பதால் தீபாவளிக்கு படம் ரிலீஸானால் தான் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பு கூறுகிறது.
அதே நேரத்தில் டியூட் படத்தையும் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் விட்டால்தான் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைக்கும் என்று அவர்கள் தரப்பும் கூறுகின்றனர். ஏனெனில் எல்ஐகே படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்தான் தயாரித்துள்ளது. ஏற்கனவே விடாமுயற்சி தக்லைஃப் போன்ற படங்களை தயாரித்து பல நஷ்டத்தை சந்தித்த இந்த நிறுவனமும் படத்தை தீபாவளிக்கே வெளியிட ஆர்வம் காட்டுகிறது.
இதற்கிடையே துபாயில் ரூ. 5 கோடி செலவில் எல்ஐகே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விழா மூலம் படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்யபப்ட்டுள்ளத. ஆனால் வருகிற தீபாவளிக்கு எல்ஐகே ரிலீஸ் ஆகுமா, டியூட் ரிலீஸ் ஆகுமா என்ற குழப்பத்தில் ரூ. 5 கோடி செலவில் இப்போது எல்ஐகே இசை வெளியீட்டு விழா அவசியம்தானா என்று ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.





