- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமலா பால் எல்லாம் பாவம்.. ஆடையில்லாமல் நடிக்கும்போது என்ன சொன்னார் தெரியுமா?.. ரகசியம் பகிர்ந்த செய்யாறு...

அமலா பால் எல்லாம் பாவம்.. ஆடையில்லாமல் நடிக்கும்போது என்ன சொன்னார் தெரியுமா?.. ரகசியம் பகிர்ந்த செய்யாறு பாலு

- Advertisement -

அமலா பால் நடித்து முதலில் ரிலீஸான படம் சிந்து சமவெளி. சாமி இயக்கியிருந்த அந்தப் படம் விவகாரமான படம். அதாவது மருமகளுக்கும், மாமனாருக்கும் இடையே தொடர்பு இருக்கும்படி அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் சாமி. இதனை பார்த்த ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சத்துக்கே சென்றனர். சாமி வீட்டில் கல் எறியும் சம்பவங்கள் எல்லாம் அரங்கேறின.

படம் சர்ச்சையை கிளப்பினாலும் அமலா பாலின் அழகும் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. அதேசமயம் முதல் படத்திலேயே இப்படி நடித்தததால் அவரது சினிமா கரியர் அவ்வளவுதான் என்று பலரும் பேசினார்கள். ஆனால் அவர்களது பேச்சை மைனா படம் மாற்றியது. பிரபு சாலமன் இயக்கிய அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அமலா பாலுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

- Advertisement -

மைனா வெற்றிக்கு பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. அதன்படி விஜய், ஆர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார். சூழல் இப்படி இருக்க தலைவா படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார். பிறகு திருமணமும் செய்துகொண்டார்.

ஆனால் அவர்கள் இருவரும் திருமணம் ஆன இரண்டே வருடங்களில் பிரிந்தார்கள். அந்த திருமண முறிவுக்கு பிறகு சிங்கிளாக இருந்த அமலா பால் சமீபத்தில்தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே அவர் படங்களிலும் பிஸியாக நடித்துவந்தார். இந்நிலையி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு அமலா பால் குறித்து அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

அவர் அளித்த பேட்டியில், “அமலா பால் முதலில் கமிட்டான படம் வீர சேகரன். கலை இயக்குநர் வீரசமர்தான் அதில் ஹீரோ. ஆனால் சிந்துசமவெளி வெளியானது. வீரசேகரன் படத்தின் ஷூட்டிங் சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. அங்கு நானும் சென்றிருந்தேன். கதாநாயகி கேரளாவிலிருந்து வருவதாக சொன்னார்கள். ஆட்டோவிலிருந்து தன் அம்மாவுடன் இறங்கினார் அமலா பால்.

ஆட்டோவிலிருந்து இறங்கியவுடன் அமலா பாலின் அம்மா மலையாளம் கலந்த தமிழில் கேரளாவிலிருந்து பஸ்ஸில் டிக்கெட் போட்டீர்கள் சரி. கோயம்பேட்டிலிருந்து இங்கு வர ஒரு காரைக்கூடவா அனுப்பமாட்டீர்கள் என்று காச் மூச் என கத்தினார். அமலா பால் அமைதியாக இருந்தார். ஆனால் அவரை பார்த்த பலரும் இவர் கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று ஆரூடம் கூறினர்.

அதன்படி அவரும் பெரிய ரவுண்டு வந்தார். இடையில் திருமணம் முறிவு ஏற்பட்டது. உடனே அவர் பெண் சாமியார் போல் ஆனார். பல கதைகளில் அவர் துணிச்சலாக நடித்தார். அப்படி அவர் ஆடை படத்திலும் ஆடை அணியாமல் நடித்தார். இயக்குநர் உட்பட 5 பேர்தான் அந்தக் காட்சி எடுக்கும்போது இருந்தார்கள். அதை பற்றியெல்லாம் கவலைப்படாத அமலா பால் அந்த ஐந்து பேரையும் எனது கணவர்களாக மனதளவில் நினைத்துக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்தேன் என துணிச்சலாக பேசினார்” என்றார்.

- Advertisement -

சற்று முன்