- Advertisement -
Homeபொழுதுபோக்குபில்லா படத்தில் நான் நடிக்க அதுதான் காரணம், ஓப்பனாக சொன்ன அஜீத்குமார், அப்போ ரஜினி...

பில்லா படத்தில் நான் நடிக்க அதுதான் காரணம், ஓப்பனாக சொன்ன அஜீத்குமார், அப்போ ரஜினி சொல்லி நீங்க நடிக்கலையா? – குழப்பத்தில் ஏகே ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் நான்கு டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் ஆகிய 4 நடிகர்களின் படங்களை இயக்குவதற்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்து கிடக்கின்றனர். ஏனென்றால் தோல்வி படங்களில் கூட அதிக லாபம் தரும் நடிகர்களாக இவர்கள் இருப்பதுதான்.

நடிகர் அஜீத்குமார் ஆரம்ப காலகட்டத்தில் காதல் நாயகனாக தான் வலம் வந்தார். பெரும்பாலும் அவர் நடித்த படங்கள் காதலை மையப்படுத்திய படங்களாகவே இருந்தன. உதாரணமாக ஆசை, காதல் கோட்டை, வாலி, அமர்க்களம், காதல் மன்னன், பூவெல்லாம் உன்வாசம் என பல படங்களில் காதல் நாயகனாகவே அஜீத்குமார் நடித்து வந்தார்.

- Advertisement -

அப்போது அவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம்தான் பில்லா. இந்த படம், கடந்த 1978ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகும். இந்த படத்தில் ரீமேக்கில் அஜீத்குமார் நடித்தார். இதில் நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

பில்லா படத்தில் அஜீத்குமாரின் கெட்டப், நடிப்பு வேற லெவலில் இருந்தது. அவரது திரை பயணமே இதற்கு பிறகுதான் வேறு மாதிரியாக மாறியது. கேங்ஸ்டர் படங்களில் அவர் நடிப்பதற்கு முதல் ஆரம்பமாக இருந்தது பில்லா படம்தான். ஆனால் பில்லா 2 படம் பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் பிளாப் ஆனது. ஆனால் பில்லா பெரிய வெற்றியை கொடுத்தது.

- Advertisement -

இந்நிலையில் பில்லா படத்தில் ரீமேக்கில் நடிக்க முதலில் சொன்னது நடிகர் ரஜினிகாந்த் தான். அவர்தான் ஒருமுறை அஜீத்குமாரிடம் பேசிக்கொண்டு இருந்த போது, பில்லா ரீமேக்கில் நீங்கள் நடியுங்கள், நன்றாக இருக்கும் என்று யோசனை சொன்னதாக தகவல் உள்ளது. ஆனால் நேர்காணல் ஒன்றில் பல ஆண்டுகளுக்கு முன் பேசிய அஜீத்குமார், பில்லா படத்தில் நடித்தது குறித்து வேறு ஒரு தகவலை கூறியிருக்கிறார்.

அஜீத்குமார் கூறுகையில், சமீபகாலமாக வேறு மொழிகளில் வந்த படங்களின் ரீமேக் படங்களில் நடித்து வருகிறோம். ஏன் நம் மொழியில் ரிலீஸ் ஆன படத்தை ரீமேக் செய்து நடிக்க கூடாது, என்று எனக்கு தோன்றியது. ரஜினி நடித்த பில்லா படம், எப்போதும் ரசிகர்களால் பேசப்படும் படம். ரஜினியின் சினிமா வாழ்க்கையில் டர்னிங் பாயிண்ட் ஆக இருந்த படம். அதனால்தான், பில்லா ரீமேக்கில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார் அஜீத்குமார். ஒருவேளை ரஜினி தன்னிடம் பர்சனலாக சொன்னதை அஜீத்குமார் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

சற்று முன்