- Advertisement -
Homeபொழுதுபோக்குதேடி வந்த விஜய் பட வாய்ப்பை வேண்டாம் என்று கூறிய லவ் டுடே இயக்குனர்? அப்படி...

தேடி வந்த விஜய் பட வாய்ப்பை வேண்டாம் என்று கூறிய லவ் டுடே இயக்குனர்? அப்படி என்ன காரணமா இருக்கும்?

- Advertisement -

விஜய் தற்போது தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். அவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், தனக்கு தேடி வந்த விஜய் பட வாய்ப்பை வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம்.

கடந்த ஆண்டு வெளிவந்த “லவ் டுடே” திரைப்படம் இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாது மிக சிறப்பாகவும் நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிகர் விஜய்யிடம் ஒரு அட்டகாசமான கதையை கூறினாராம். அந்த கதை விஜய்க்கும் பிடித்துப்போக மேற்கொண்டு கதையை டெவலெப் செய்ய சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதன் பின் சில நாட்கள் கழித்து பிரதீப் ரங்கநாதனை தயாரிப்பு நிறுவனம் அணுகியபோது, “என்னை லவ் டுடே திரைப்படத்தின் மூலம் மக்கள் நடிகராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஆதலால் நடிப்பில் கவனம் செலுத்தலாம் என இருக்கிறேன். இந்த தருணத்தில் விஜய் படத்தை இயக்கி விட்டு வந்தால் இந்த இடைவெளியில் மக்கள் என்னை மறந்துவிடுவார்கள். ஆதலால் நான் விஜய் படத்தை இயக்குவதாக இல்லை” என கூறிவிட்டாராம். இவ்வாறு தனக்கு தேடி வந்த விஜய் பட வாய்ப்பை வேண்டாம் என கூறி பிரதீப் ரங்கநாதன் மறுத்திருக்கிறார்.

விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வர, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் “தளபதி 68” திரைப்படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சற்று முன்