- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் பார்த்த தனுஷ் இப்போ இல்லை, என் கிட்டயே அப்படி நடந்துக்குறார்- வெளிப்படையாக பேசும் பிரகாஷ்...

நான் பார்த்த தனுஷ் இப்போ இல்லை, என் கிட்டயே அப்படி நடந்துக்குறார்- வெளிப்படையாக பேசும் பிரகாஷ் ராஜ்

- Advertisement -

தனுஷ் நடிக்க வந்த புதிதில் அவர் உருவத்தை கேலி செய்யாத விமர்சகர்களே இல்லை. “பென்சில் மாதிரி இருக்கிறான்”, “புல் தடுக்கி பயில்வான்” போன்ற வார்த்தைகளால் தனுஷை கேலிக்குள்ளாக்கினார்கள். ஆனால் அந்த விமர்சனங்களையும் உருவ கேலிகளையும் தன்னுடைய ஏணிப்படிகளாக நினைத்து அதில் ஏறி தற்போது இந்திய சினிமாவின் முக்கிய நடிகராக தனுஷ் வலம் வருகிறார்.

தனுஷ் தொடக்கத்தில் ஒரு கியூட் பாயாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்திருந்தாலும், அதன் பின் அவரது வளர்ச்சி ஆச்சரியப்பட வைத்தது. பல்வேறு கதாபாத்திரங்களை மிகவும் துணிச்சலாக தேர்ந்தெடுத்து நடித்த தனுஷ், கதை தேர்வுகளில் மிகவும் உசாராகவே இருந்தார்.

- Advertisement -

மேலும் இதனுடன் சினிமாவின் மீதுள்ள காதல் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளது. தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளாராகவும் இயக்குனராகவும் உருமாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த தனுஷ், “பா பாண்டி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதன் பின் தற்போது தனுஷ் தனது 50 ஆவது திரைப்படத்தில் நடித்து அதனை இயக்கியும் வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். பிரகாஷ் ராஜ் தற்போது தனுஷ் இயக்கும் “D 50” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அந்த பேட்டியில் தனுஷ் ஒரு இயக்குனராக வளர்ச்சியடைந்தது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “பிரகாஷ் ராஜ் என்ற அனுபவம் வாய்ந்த நடிகருடன் நாம் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறோமே என்ற நாள் போய், பிரகாஷ் ராஜின் வளர்ச்சியையும் தாண்டி தனக்கு எப்படிப்பட்ட ரியாக்சன் வேணுமோ அதை கேட்டு வாங்குகிறார்.

தனுஷை ஒரு வளர்ந்த நடிகராக பார்ப்பது வேறு, ஆனால் இப்போது அவர் கதையில் நான் ஒரு கதாபாத்திரமாக பார்ப்பது இருக்கிறதே, அப்படி பார்க்கக்கூடிய அளவுக்கு இவர் வளர்ந்திருக்கிறார் என்னும்போது நம்மிடம் அவருக்கு தேவையான நடிப்பை கேட்டு வாங்கிக்கொள்கிறார் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. சரியாக வளார்ந்திருக்கிறார் என்று தோன்றுகிறது” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்