கடந்த 30 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய சினிமாவில் ஹீரோக்களின் சம்பளம் லட்சங்களாக தான் இருந்தது. கோடிகளில் சம்பளம் என்பதெல்லாம் கனவாக தான் கருதப்பட்டது. ஆனால் இப்போது முன்னணி நடிகர்களின் சம்பளங்கள் கோடிகளில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. அதுவும் 100 கோடி ரூபாய் 200 கோடி ரூபாய் 300 கோடி ரூபாய் என்று மிரட்டுகின்றன.
தமிழ் சினிமாவை பொருத்த வரை ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய் மட்டும்தான். அடுத்த இடங்களில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற சீனியர் நடிகர்களின் சம்பளம் ரூ. 150 கோடியை இன்னும் தாண்டவில்லை. அஜீத்குமார் இப்போதுதான் ரூ. 100 கோடியை கடந்திருக்கிறார்.
அடுத்த வரிசையில் நடிகர் தனுஷ் ரூ. 50 கோடி நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 75 கோடி சூர்யா ரூ. 30 கோடி சிம்பு ரூ. 40 கோடி விக்ரம் ரூ. 50 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் சில கோடிகள் படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு ஏற்ப அதிகரிக்கவோ குறைக்கவோ செயயலாம்.
அதே போல் நடிகைகளில் நயன்தாரா சம்பளம் ரூ. 12 கோடி, நடிகை திரிஷா சம்பளம் ரூ. 10 கோடி, நடிகை சாய்பல்லவி சம்பளம் ரூ. 8 கோடி வரை சொல்லப்படுகிறது. மற்றபடி தமன்னா ஒரு பாடலுக்கு ரூ. 1.5 கோடி வரை வாங்குகிறார். இந்த வரிசையில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடித்த தமிழன் படம் 2002ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் இந்தியில் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாகி விட்டார்.
திருமணத்துக்கு பின் 6 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க வந்துவிட்டார். பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி இயக்கும் தெலுங்கு படம் ஒன்றில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக அவர் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 30 கோடி சம்பளம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகையாக பிரியங்கா சோப்ரா இருக்கிறார். 2வது இடத்தில் நடிகை இந்தி நடிகை தீபிகா படுகோன் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.





