- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்தில் நடித்த டாப் ஸ்டார் பிரசாந்த், புன்னகையரசி சினேகா வாங்கிய சம்பளம் எவ்ளோ...

தி கோட் படத்தில் நடித்த டாப் ஸ்டார் பிரசாந்த், புன்னகையரசி சினேகா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா? – இவ்ளோ கோடிகளை அள்ளிக் கொடுத்திருக்காங்களே?

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆலடைம் படம் நேற்று வெளியானது. தி கோட் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படக்குழு உற்சாகத்தில் இருந்து வருகிறது. இது எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ராஜதுரை படத்தின் கதை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

தி கோட் படத்தை பொருத்த வரை அப்பா, மகன் என 2 வேடங்களில் விஜய் நடித்திருந்தாலும் மகன் விஜய் நடிப்பில், வேற லெவலில் அதகளம் செய்திருக்கிறார் என்று சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். எந்தவிதமான கட்டுபாடுகளுக்கும் சிக்காமல் மகன் விஜய் நடிப்பு தரமாக உள்ளதாக கூறுகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தில் விஜயுடன் பிரசாந் நண்பராக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் 1990களில் டாப் ஸ்டாராக வலம் வந்த நடிகர் பிரசாந்த், இடையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். இப்போது மீண்டும் தனது 2வது இன்னிங்ஸை துவங்கி விட்டார். பிரசாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான அந்தகன் படம் மிகப்பெரிய வெற்றியை, வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

இப்போது தி கோட் படத்திலும் அழுத்தமான ஒரு கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார் பிரசாந்த். நடிகை சினேகா, முதன்முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானது பிரசாந்த் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விரும்புகிறேன் என்ற படத்தில்தான் தீயணைப்பு துறை வீரர் பிரசாந்துக்கு, சினேகா ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

- Advertisement -

தி கோட் படத்தில் சினேகாவும் முக்கிய கேரக்டரில், விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அப்பா, மகன் என்ற 2 வேடங்களில் விஜய் நடித்துள்ள நிலையில் இதில் அப்பா விஜய்க்கு சினேகா மனைவியாக நடித்திருக்கிறார். அவரது அழகும், நடிப்பும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தி கோட் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இதில் நடிகர் விஜய் சம்பளம் ரூ. 200 கோடி என்ற நிலையில், மீதி ரூ. 200 கோடி செலவில் மற்ற நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், படம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தி கோட் படத்தில் நடித்ததற்காக நடிகர் பிரசாந்துக்கு ரூ. 5 கோடி, நடிகை சினேகாவுக்கு ரூ. 75 லட்சம் என சம்பளம் வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்