- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்ததாக தமிழ் திரையுலகை ஆட்டிப் படைக்க வரும் மலையாள திரைப்படம்... இந்த முறை ரெட் ஜெயன்ட்...

அடுத்ததாக தமிழ் திரையுலகை ஆட்டிப் படைக்க வரும் மலையாள திரைப்படம்… இந்த முறை ரெட் ஜெயன்ட் மூவிஸ் உள்ள இருக்காம்…

- Advertisement -

மலையாளத் திரையுல இருக்கிற தமிழ்நாட்டில் அவ்வபோது வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக பிரேமம் திரைப்படத்தை இதில் கூறலாம். ஆட்டோகிராப் படத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மலையாளத் திரை உலகையும் தாண்டி தமிழ் சினிமாவில் சக்கை போடு போட்டது.

இதற்கு முக்கிய காரணம், தமிழ் ரசிகர்களுக்கு எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள்தான். காதலை சொல்லிய விதமாகட்டும், நடிகர்களின் எதார்த்தமான உடல் மொழியாகட்டும் ஒருசேர சரியாக அமைந்திருந்ததால் பிரேமம் திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர்.

- Advertisement -

அதிலும், மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இப்போது வரை பிரேமம் திரைப்படத்தை பார்ப்பதற்கு என ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இதன் பிறகு வெளியான முக்கியமான மலையாளத் திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் ஓரளவு பேசப்பட்டே வந்தன.

துல்கர் சல்மானின் சார்லி திரைப்படத்திற்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இங்கு உண்டு. இந்த வரிசையில், தற்போது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படமும் இணைந்துள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மலையாளத்தை விட தமிழில் அதிக அளவு வசூலித்து வருகிறது.

- Advertisement -

கண்மணி அன்போடு என குணா திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலும், இரண்டாம் பாதியில் இடம் பெற்ற வலுவான திரைக்கதையும் படத்தை வேறொரு தளத்திற்கு அழைத்துச் சென்றதால் ரிப்பீட்டட் ஆடியன்ஸ்கள் இதற்கு வர ஆரம்பித்து உள்ளனர். இதன் காரணமாக 150 கோடி ரூபாய் வசூலை இந்த படம் ஈட்டி இருக்கிறது.

இந்த நிலையில் மலையாளத்தில் தற்போது மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரேமலு திரைப்படமும் தமிழில் டப் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் குவித்தது. தற்போது தமிழிலும் படம் வெளியாக இருப்பதால் படத்தின் வசூல் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் 15ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியிடப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்