- Advertisement -
Homeபொழுதுபோக்கு17 வயசுலயே செயினை கழற்றிக்கொடுத்து உதவி செய்தவர் விஜயகாந்த்.. பிரேமலதா நெகிழ்ச்சி.

17 வயசுலயே செயினை கழற்றிக்கொடுத்து உதவி செய்தவர் விஜயகாந்த்.. பிரேமலதா நெகிழ்ச்சி.

- Advertisement -

மதுரையில் பிறந்த விஜயகாந்த் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர். ஆரம்பட்தில் பல கஷ்டங்களை சந்தித்து சில படங்களில் வில்லன் ரோலில் நடித்து பிறகு ஹீரோவாக அறிமுகமானார். அவர் ஹீரோவாக நடித்தாலும் எடுத்ததும் படங்கள் ஓடவில்லை. அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் தூரத்து இடி முழக்கம். அதன் பிறகு விஜயகாந்த் தொட்டதெல்லாம் ஹிட்டானது.

ரஜினியும், கமலும் கொடிக்கட்டி பறந்துகொண்டிருந்த சமயத்தில் விஜயகாந்த்தும் தனக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். அவருக்கென்று கிராமத்தில் பலரும் ரசிகர்களாக மாறினர். சி செண்ட்டரில் எல்லாம் விஜயகாந்த்தின் படம் மெகா ஹிட்டாகின. இன்னும் சொல்லப்போனால் அவரை தங்கள் வீட்டில் ஒருவராகவே நினைத்துக்கொண்டனர் மக்கள்.

விஜயகாந்த் என்றாலே உதவிதான். அவரது உதவி செய்யும் குணத்தை பலரும் பேசியிருக்கிறார்கள். சினிமாவில் ஒருவரை ஒருவர் புறம் பேசும் சூழல்தான் நிலவும். ஆனால் விஜயகாந்த் ஆக்டிவ்வாக செயல்பட்டு கடந்த சில வருடங்கள் ஆகிவிட்டன. இந்த இடைபட்ட காலத்தில் விஜயகாந்த்தை பற்றி பலர் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் விஜயகாந்த்தை பற்றி பேசும்போதெல்லாம் ஒருவார்த்தைக்கூட தவறாக பேசியதில்லை. மூத்த கலைஞர்கள் முதல் தற்கால நடிகர் ஷாம்வரை என பலருக்கும் அவர் உதவி செய்திருக்கிறார்.

சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் எண்ட்ரி ஆகி எதிர்க்கட்சி தலைவராக மாறினார். பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்தார். மறுபக்கம் அவரது உடல்நிலையும் மோசமடைந்தது. தற்போது அவர் முழு ஓய்வில் இருக்கிறார். இன்று அவர் தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் சொல்லிவருகின்றனர். பலர் விஜயகாந்த்துடனான தங்கள் நினைவுகளையும் பகிர்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த் குறித்து அவரது பிரேமலதா பேசிய வீடியோ இணையதளத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் அவர், “எனக்கு கல்யாணம் ஜனவரி மாதம் ஆனது. மார்ச் மாதம் பிறந்தநாள். கல்யாணம் ஆனவுடன் முதல் பிறந்தநாளுக்கு அவர் ஏதேனும் ஒரு பரிசு கொடுப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை. அதனையடுத்து கேப்டனுடனேயே இருக்கும் சுப்பையா என்பவர்தான் அண்ணிக்கு பரிசு கொடுக்கிறது இல்லையா என கேட்டார். பிரேமாவுக்கு பரிசா என ஆச்சரியமாக கேட்டுவிட்டு ஒருவழியாக வி என்ர எழுத்து பொறித்த தங்க செயினை எனக்கு பரிசாக கொடுத்தார். அதை இப்போது பத்திரமாக வைத்திருக்கிறேன்.

அதேபோல் விஜயகாந்த் பத்தாவது வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ரைஸ் மில்லை கவனிக்க வந்துவிட்டார். அப்படி ஒருநாள் அவர் ரைஸ் மில்லில் இருக்கும்போது அங்கு வந்த ரிக்‌ஷா தொழிலாளி தனது மகனின் படிப்புக்கு பணம் கட்ட முடியாமல் தவித்ததை கேப்டன் அறிந்திருக்கிறார். உடனே தனது தந்தை தனக்கு ஆசையாக போட்ட தங்க செயினை கழற்றி அந்த ரிக்‌ஷாக்காரரிடம் கொடுத்து இதை அடகு வைத்து பையனை படிக்க வையுங்கள் என சொல்லியிருக்கிறார். இதை செய்யும்போது அவருக்கு வயது 17தான்.

செயினை காணும் என்று தெரிந்து கேப்டனின் தந்தை அவரை கடுமையாக தாக்கிவிட்டார். வேறு வழியில்லாமல் விஜயகாந்த்தும் நடந்ததை சொல்லியிருக்கிறார். ஆனால் அவரது தந்தையோ உன் சம்பாத்தியத்துல அந்த செயின் வாங்குனியா உதவி செய்ய என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் இனி நான் உழைத்து வரும் காசில்தான் செயின் போடுவேன் என்று உறுதி எடுத்து அதன்படியே நடந்தார்” என்றார்.

சற்று முன்