- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தை யாரேனும் செய்தால், நிச்சயமாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன், சென்சேஷனல் நடிகை...

அந்த விஷயத்தை யாரேனும் செய்தால், நிச்சயமாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன், சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ திடீர் எச்சரிக்கை – குழப்பத்தில் ரசிகர்கள்

- Advertisement -

நடிகை மமிதா பைஜூ பிரமேலு மலையாள படத்தில் நடித்து, சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தமிழில் ஜிவி பிரகாஷ் குமார் ஜோடியாக ரெபல் என்ற படத்திலும் நடித்து, ரசிகர்களுக்கு அறிமுகமாகி உள்ளார். இனி அடுத்ததாக விஜயின் 69வது படத்தில், அவருக்கு மகளாக அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் உள்ளன.

சினிமாவை பொருத்தவரை ஓரிரு படங்களில் நடித்தாலும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும் அதிர்ஷ்டம் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அதில் மமிதா பைஜூம் ஒருவர். பிரேமலு என்ற ஒரே ஒரு படம்தான், அவரை இந்திய அளவில் அடையாளம் காணப்படும் ஒரு நடிகையாக மாற்றியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

அதனால்தான், இவ்வளவு விரைவாக நடிகர் விஜய்க்கு மகளாக நடிக்கும் கேரக்டர் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தளபதி விஜய் படத்தில் நடிக்க பல நடிகைகளுக்குள் போட்டி நிலவும் நிலையில், பிரேமலு படம் தந்த வெற்றியால் இன்று, விஜய் படத்தில் அவருக்கு மகளாக நடிக்கும் அளவுக்கு அவரது இமேஜை உயர்த்திருக்கிறது.

இன்றைய சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது, ஒருவரது பெயரில் மற்றவர்கள் போலியான கணக்கை துவங்கி விடுவதுதான். இதுபோன்ற மோசடி நபர்கள் போலி கணக்குகளை துவங்கி அதில் நண்பர்களாக உள்ளவர்களிடம் பணம் கேட்பது, கடன் கேட்பது, தகாத செய்திகளை, புகைப்படங்களை பதிவிடுவது என அழிச்சாட்டியம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி, திரை பிரபலங்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகளின் சமூக வலைதள பக்கங்களில் ஊடுருவி, தேவையற்ற தகவல்களை அதில் பதிவு செய்கின்றனர். வலைதள கணக்கே இல்லாத நடிகர், நடிகைகளின் பெயரில் போலி கணக்குகளையும் துவங்கி, பிரச்னைகளை உருவாக்குகின்றனர்.

இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில், நடிகை மமிதா பைஜூ பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள மமிதா பைஜூ, எனக்கு எக்ஸ் தள பக்கத்தில் எந்த கணக்கும் இல்லை. போலி கணக்குகளை உருவாக்கி என்னுடைய பெயரை அவதூறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அதில் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்