- Advertisement -
Homeபொழுதுபோக்குவருங்கால மனைவியின் ஆசைக்கு செவி சாய்க்காத நடிகர் பிரேம்ஜி - இதுல இப்படி ஒரு பிரச்னை...

வருங்கால மனைவியின் ஆசைக்கு செவி சாய்க்காத நடிகர் பிரேம்ஜி – இதுல இப்படி ஒரு பிரச்னை வருமுன்னு தெரியாம போச்சே? – என்ன கொடும சார் இது?

- Advertisement -

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு வெங்கட்பிரபு, பிரேம்ஜி என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 44 வயதான பிரேம்ஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது திருமணம் எப்போது என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர். ஆனால், பிரேம்ஜிக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். அதில் பெண் நண்பர்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில், 2024ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று தனது ரசிகர்களுக்கு சினிமா வாழ்த்துச் சொன்ன பிரேம்ஜி, இந்த ஆண்டு என் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று தெரிவித்திருந்தார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு உறுதியாக சொல்கிறாரே என பலரும், பெண் பார்த்து விட்டீர்களா, ஓகே ஆகி விட்டதா என்றெல்லாம் கமெண்ட் செய்து கேட்டிருந்தனர்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து சில தினங்களில் அவர், தன்னை விட 20 வயது குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். இருவருமே நீண்டகாலமாக நண்பர்களாக இருப்பவர்கள். அதனால் அவர்களுக்குள் நிதானமாக பேசி இந்த திருமணத்துக்கு முடிவு செய்துவிட்டனர். கோட் படம் வெளியீட்டுக்கு பின் இந்த திருமணம் சிறப்பாக நடக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த சூழலில், பிரேம்ஜி ஒரு இளம்பெண்ணுடன் ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை வைரலாக்கிய சிலர், இதுதான் பிரேம்ஜி திருமணம் செய்துக்கொள்ளப் போகும் வருங்கால மனைவி என கிளப்பி விட்டனர். இதனால் பலரும், அவர்தான் பிரேம்ஜியின் வருங்கால மனைவி என நினைத்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது அவரது பெண் தோழிதான். அவர் கட்டிக்க போகிற பெண் அவரல்ல. உண்மையில் அவரை திருமணம் செய்துக்கொள்ள இருக்கிற அவரது மனைவி, இதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார். நான்தான் உங்கள் வருங்கால மனைவி என நீங்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யுங்கள் என்றால், பிரேம்ஜி அதற்கு சம்மதிக்க மறுக்கிறார். அதனால் ஏதேனும் பிரச்னையாகி, திருமணம் தடைபடுமோ என்று அச்சப்பட்டிருக்கிறார்.

ஆனால் இந்த நிலையில், பெரியப்பா இளையராஜா மகள், சகோதரி பவதாரணி இறந்து விட்டதால், இன்னும் ஓராண்டுக்கு எந்த சுபகாரியமும் நடத்தக் கூடாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் பிரேம்ஜி திருமணம் இப்போதைக்கு இல்லை என்ற சோகமான முடிவும் ஏற்பட்டுள்ளது. தங்கையின் மறைவால் மனம் நொந்து போயிருக்கும் அந்த குடும்பத்தினர், இன்னும் ஓராண்டுக்கு பிறகுதான் பிரேம்ஜி திருமணம் குறித்து யோசிக்கவே செய்வார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்