தமிழ் சினிமா இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிசெய்தவர் அட்லி. ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழில் முன்னணி இயக்குனராக மாறினார்.
தொடர்ந்து இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு வந்தது. அந்த படமும் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. பாலிவுட்டில் அட்லி அதிக கவனம் பெற்றார். தொடர்ந்து சல்மான் நடிக்கும் ஒரு படத்தை அவர் டைரக்ட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழில் விஜய் சமந்தா எமி ஜாக்சன் ராதிகா சரத்குமார் இயக்குனர் மகேந்திரன் பிரபு உள்ளிட்டோர் நடித்த படம் தெறி. இந்த படத்தை அட்லி இயக்கி இருந்தார். மெகா ஹிட் படமான இதை, இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் அட்லி தயாரித்தார். காலிஸ் என்பவர் படத்தை இயக்கினார்.
இதில் விஜய் கேரக்டரில் வருண் தவான், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்தனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான இந்த படம் 4 நாட்களில் ரூ. 20 கோடி வசூலை கூட தாண்டவில்லை. இதனால் இயக்குனர் அட்லிக்கு இந்த படத்தை தயாரித்த வகையில் ரூ. 80 கோடிக்கு மேல் பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பேபி ஜான் படத்தின் மாபெரும் தோல்விக்கு இதுதான் என்ற ஒரு புதிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது தமிழில் தெறி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு முக்கிய காரணமே நடிகர் விஜய்தான். அவருக்கு தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருக்கும் மாஸ் தான் அந்த படத்தை ஜெயிக்க வைத்தது.
தமிழில் வெளியான தெறி படம் இந்தி டப்பிங்கில் வெளியாகி யூடியூப்களில் உள்ளது. இந்த சூழலில், எதற்காக விஜய் கேரக்டரில் வருண் தவானையும், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷையும் நடிக்க வைத்து தெறி படத்தை பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்து அட்லி தயாரிக்க வேண்டும். இந்த சிம்பிள் லாஜிக் கூட இவருக்கு தெரியலையே என ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.





