- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரியாமணிக்காக, நடன இயக்குனரிடம் கறார் காட்டிய ஷாருக்கான்... ஜவான் பட சூட்டிங்கில் நடந்தது என்ன...

பிரியாமணிக்காக, நடன இயக்குனரிடம் கறார் காட்டிய ஷாருக்கான்… ஜவான் பட சூட்டிங்கில் நடந்தது என்ன…

- Advertisement -

அட்லி இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படம், 2019 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு இயக்குனர் யாருடன் இணையப் போகிறார் என்று கேள்வி தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் ஷாருக்கானுடன் கைகோர்த்தார் அட்லி.

அட்லியுடன் இணைவதற்கு முன்னதாக பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார் ஷாருக்கான். கொரோனா வந்ததிலிருந்து, மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியாமல் திண்டாடி வந்த பாலிவுட் திரையுலகம், பதான் திரைப்படம் மூலம் தலைநிமிர்ந்தது. 200 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 650 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

இதன்பிறகு, அட்லி – ஷாருக்கான் இயக்கத்தில் உருவானது ஜவான் திரைப்படம். இதில் நடிப்பதற்காக தமிழ் திரையுலகிலிருந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோரை பாலிவுட்க்கு அழைத்துச் சென்றார் அட்லி. கொரோனா காலமாக ஆரம்பத்தில் இருந்தே இதன் பணிகளில் சுணக்கம் ஏற்பட, படம் மிக தாமதமாக ரெடியானது.

இந்த நிலையில் கடந்த வாரம் வெளியான ஜவான் திரைப்படம், இந்தி திரையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதேசமயம், அட்லியை தமிழ் திரையுலக ரசிகர்கள் ஜவான் திரைப்படத்தை பார்த்துவிட்டு கழுவி கழுவி ஊற்றினர். முன்பெல்லாம் ஏதாவது ஒரு படத்தை தான் காப்பியடிப்பார் அட்லி என்றும், ஆனால் இந்த படத்தில் எத்தனை திரைப்படங்களை எடுத்து வைத்திருக்கிறார் என்றே தெரியவில்லை எனவும் புலம்பினர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், வசூலில் ஜவான் புதிய சாதனையை படைத்து வருகிறது. படம் ரிலீஸ் ஆன ஆறே நாட்களில் 620 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானின் ஆக்சன் அணியில் ஒருவராக பிரியாமணி நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற ஜிந்தா பந்தா பாடலில், ஷாருக்கானுக்கு பின்னால் நின்று நடனமாடி இருக்கிறார் பிரியாமணி. ஏற்கனவே இருவரும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் சேர்ந்து நடனமாடி இருப்பதால், இதை கவனித்த ஷாருக்கான் ஏன் இங்கே நின்று ஆடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நடன மாஸ்டர் சோபி தான் இங்கு இருக்க சொன்னதாக, பிரியாமணி கூற, உடனடியாக ப்ரியாமணியை தன் பக்கத்தில் நின்று ஆட வைக்க சொல்லி இருக்கிறார் ஷாருக்கான். உடனடியாக சோபி மாஸ்டரை அழைத்த நடிகர், இதனால் எனக்கு என்ன இடைஞ்சல் வந்தாலும் பரவாயில்லை. இவர் இங்கு தான் ஆடுவார். சென்னை எக்ஸ்பிரஸ் எனக்கு இவர் நடனமாட கற்றுக் கொடுத்தார் என்று கறார்ராக கூடியிருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்