- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோவாக அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பாளர், முதல் படத்திலேயே இப்படி ஒரு கேரக்டரா? -...

ஹீரோவாக அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பாளர், முதல் படத்திலேயே இப்படி ஒரு கேரக்டரா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறுகின்றனர். அப்படி என்றால் தயாரிப்பாளர் நடிகராக அதுவும் ஹீரோவாக மாறக் கூடாதா என்ற கேள்விக்கு பதில் தருவது போல் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ் இப்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். இது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நயினார் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடித்த அறம் படத்தை தயாரித்தவர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ்தான். ஐரா படத்தையும் தயாரித்தவர் அவர்தான்.அதே போல் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ டாக்டர் அயலான் ஆகிய படங்களை தயாரித்தவரும் இவர்தான். இதில் டாக்டர் தவிர மற்ற 2 படங்களும் அவருக்கு பெரிய லாபத்தை பெற்றுத் தரவில்லை. நஷ்டத்தை தான் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில் தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் நடிகராக மாறியிருக்கிறார். அதுவும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிசெய்த தென்பாண்டியன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ராஜேஷ், விளையாட்டு வீரராக நடித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ஹீரோவின் பெயர் ஆதிரன். மற்றபடி படத்தில் நடித்துள்ள மற்ற கேரக்டர்களின் பெயர்கள் எல்லாமே ஒரிஜினல் பெயர்கள் என்று கூறப்படுகிறது. அதாவது நிகழ்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் கேரக்டர்களை படத்தில் கொண்டு வந்து, படத்திலும் அவர்களது சொந்த பெயர்களை அந்த கேரக்டர்களுக்கு பயன்படுத்தி உள்ளனர்.

- Advertisement -

உண்மை சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களம் என்பதால், இந்த படத்தில் அரசியல் அதிகமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் இயக்கும் படம் என்பதால் நிச்சயமாக அந்த படம் அரசியல் பேசும் படமாக தான் இருக்கும் என்றும் பேசப்படுகிறது.

இந்த படத்தில் இப்போது ஒரு டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் கோர்ட் ஒன்றில் படத்தில் நாயகன் ராஜேஷ் செல்வது போலவும் அங்கே கூட்டமாக வக்கீல்கள் வருவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை ஸ்வஸ்திக் விஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மிக விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்