- Advertisement -
Homeபொழுதுபோக்குகொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்டு ஏமாந்து போன கோட் படம் தயாரிப்பு நிறுவனம், சோணமுத்தா போச்சா? -...

கொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்டு ஏமாந்து போன கோட் படம் தயாரிப்பு நிறுவனம், சோணமுத்தா போச்சா? – கலாய்க்கும் நெட்டிசன்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில்தான் வணிகம்தான் பிரதானம். ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம், அந்த படத்துக்கான தயாரிப்பு செலவையும் தாண்டி அதிக லாபத்தை பெறும்போதுதான் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க முன்வருகிறது. அந்த வகையில் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமங்கள் கணிசமான வருவாயை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தருகின்றன.

நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். கோட் என சுருக்கமாக குறிப்பிடும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. இப்போது அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோவில் சிஜி தொழில்நுட்ப பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதில் நடிகர் விஜய் பங்கேற்ற பிரத்யேக ஷூட் நடந்து வருகிறது.

- Advertisement -

இந்த படத்துக்கு முன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம், டிஜிட்டல் உரிமம் 125 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல் இந்த கோட் படமும், அதிக விலைக்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கோட் படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ, 150 கோடி என டிஜிட்டல் உரிமம் என விலை நிர்ணயித்தது.

இதையடுத்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், கோட் படத்தை ரிலீஸ் செய்யும் வகையில், டிஜிட்டல் உரிமத்துக்காக ரூ. 140 கோடிக்கு அந்நிறுவனம் விலை பேசியது. ஆனால் ரூ. 150 கோடியில் ஒரு ரூபாயை கூட குறைக்க மாட்டோம் என்று ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிடிவாதம் காட்டியதால், ஒரு கட்டத்தில் அமேசான் பிரைம் கோட் படம் வேண்டாம் என விலகி விட்டது.

- Advertisement -

இந்த சூழலில், அதிக விலை கேட்டு மற்ற டிஜிட்டல் தளங்கள் முன்வராத நிலையில், மீண்டும் அமேசான் பிரைம் தளத்தை தொடர்பு கொண்ட ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் ரூ. 140 கோடிக்கு சம்மதம் என்று கூறிய போது, எங்கள் விலைகளை முடித்து விட்டோம் என்று கறாராக கூறி மறுத்துவிட்டது.

இதையடுத்து வேறு வழியின்றி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு கோட் படத்தை ரூ. 110 கோடிக்கு டிஜிட்டல் உரிமம் தந்து விற்றுள்ளது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம். முதலில் ரூ. 10 கோடியை மட்டுமே குறைத்த அமேசான் பிரைம் நிறுவனத்துக்கு கோட் படத்தை விற்க மறுத்த தயாரிப்பு நிறுவனம், இப்போது அதைவிட ரூ. 30 கோடி குறைத்து உரிமத்தை விற்றுள்ளது. இப்படி ஆரம்பமே ரூ. 30 கோடியை இழந்திருக்கிறது கோட் பட தயாரிப்பு நிறுவனம். இதை நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்