நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில், 460 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய படமான லியோ படம் 585 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், ஏறக்குறைய 140 கோடி ரூபாய் தி கோட் படம் வசூலில் பின்தங்கி விட்டது. எனினும் படத்தை ரூ. 385 கோடி ரூபாயில் தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு பலத்த லாபம்தான்.
ஏனெனில் தியேட்டர்களில் வசூல் ரீதியாக 75 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது மட்டுமின்றி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு இந்த படத்தை விற்ற வகையில் ரூ. 120 கோடி, சாட்டிலைட் உரிமம் விற்ற வகையில் ரூ. 90 கோடி என மொத்தமாக 285 கோடி ரூபாய் வரை அதிக லாபம் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனால் தி கோட் படம் லாபம் தந்த பெரிய வெற்றிப் படமாக தான் உள்ளது.
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்துள்ள நடிக்க உள்ள அவரது 69 படத்தை இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் நடித்தவர். அனிருத் இசையமைக்கிறார். பாபு தியோல் வில்லனாக நடிக்கிறார். சமந்தா, சிம்ரன், மோகன்லால், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
விஜய் தனது 69வது படத்தில் நடித்து முடித்த பிறகு, சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, அடுத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறார். முன்னதாக வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த உள்ளார்.
தற்போது விஜய் 69 படத்தின் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 4ம் தேதி, அதாவது வருகிற வெள்ளிக்கிழமை படத்தின் பூஜை நடக்கிறது அதைத் தொடர்ந்து அடுத்த நாள் 5ம் தேதி சனிக்கிழமை பையனூரில் ஷூட்டிங் துவங்குகிறது. முதல் நாளில் பாடல் காட்சி எடுக்கப்படுகிறது. தொடர்ந்து ஷூட்டிங் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு புதுப்படங்கள் பூஜை போடக்கூடாது, நவம்பர் 1ம் தேதி முதல் என்ற படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இப்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மட்டும் வரும் 4ம் தேதி பூஜை போடப்பட்டு, அதன்பிறகு 5ம் தேதி படப்பிடிப்பை துவங்குவது எப்படி என்ற கேள்வியை தமிழ் சினிமா வட்டாரத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது. சின்ன நடிகருக்கு ஒரு நீதி, பெரிய நடிகருக்கு ஒரு நீதியா என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.





