- Advertisement -
Homeபொழுதுபோக்குபோயஸ் கார்டன் ஜெயலலிதா வீட்டுக்கு திடீரென விசிட் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - அவர்...

போயஸ் கார்டன் ஜெயலலிதா வீட்டுக்கு திடீரென விசிட் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – அவர் வந்த காரணம் தெரிந்து திக்குமுக்காடிய அதிமுகவினர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் செல்வி ஜெயலலிதா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 127 படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் முத்துராமன் ஜெமினி ஜெய்சங்கர் போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்தவர். எம்ஜிஆருடன் மட்டும் 26 படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்த ஜெயலலிதா, எம்பி ஆக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தமிழ்நாட்டில் முதல்வராக ஆட்சி செய்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக தன்னை கூறி வருகிறார்.

- Advertisement -

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளாகும். அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் 77 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினர் ஜெயலலிதா பிறந்த நாளில் இனிப்பு வழங்கி அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி அன்னதானம் வழங்கி இந்நாளை சிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கு திடீர் விசிட் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட அதிமுகவினர் ரஜினிகாந்தை வரவேற்றனர். நேராக வீட்டுக்குள் சென்ற அவர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு முன்பு இருந்த குத்துவிளக்கே ஏற்றி வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

- Advertisement -

பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, தீபாவும் அவரது கணவரும் என்னை நேரில் சந்தித்து, போயஸ்கார்டனில் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுகிறோம். நீங்கள் நேரில் வரவேண்டும் என்றனர். அவர்களது அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ளேன். இப்போது 4வது முறையாக வந்துள்ளளேன்.

கடந்த 1977ம் ஆண்டில் நானும் ஜெயலலிதாவும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் பிறகு அது நடக்கவில்லை. அப்போது அவர் என்னை பார்க்க வர வேண்டும் என்றதால் முதல் முறையாக ஜெயலலிதாவை பார்க்க இந்த வீட்டுக்கு வந்தேன். 2வது முறை ராகவேந்திரா மண்டபம் திறப்பு விழாவுக்கு அவரை அழைக்க வந்தேன். 3வது முறை என் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் தர வந்தேன். இப்போது 4வது முறை அவர் இல்லாத நிலையில் இங்கு வந்துள்ளேன். ஆனாலும் அவர் நினைவு எப்போதும் இங்கு இருக்கும். அவர் வாழ்ந்த வீட்டில் அஞ்சலி செலுத்திவிட்டு அவரை பற்றிய இனிப்பான சுவையான நினைவுகளுடன் செல்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்