- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 1800 கோடி வசூலித்த புஷ்பா 2 படம், இந்த டிவியில் அந்த விசேஷ...

ரூ. 1800 கோடி வசூலித்த புஷ்பா 2 படம், இந்த டிவியில் அந்த விசேஷ நாளில் போடப் போறாங்களா? – வாவ் என உற்சாகமான ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சக்கைப் போடு போட்ட படம்தான் புஷ்பா. இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் செம்மர கடத்தல் மன்னனாக இந்த படத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். சுனில் ரமேஷ் ராவ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர்.

புஷ்பா படத்தில் பிரதான வில்லன் கேரக்டரில் நடிகர் பகத் பாசில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தில் சமந்தா ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சண்டை காதல் சென்டிமென்ட் காட்சிகளில் அல்லு அர்ஜூன் அழுத்தமான நடிப்பை தந்திருந்தார்.

- Advertisement -

புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக புஷ்பா 2 படம் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியானது. வழக்கமாக 2ம் பாகம் படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்திக்கும் என்ற சென்டிமென்டை அடித்து நொறுக்கி, புஷ்பா 2 படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. உலகம் முழுவதும் 1800 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா சுனில் பகத் பாசில் ரமேஷ் ராவ் ஆகியோர் நடிப்பில் 2ம் பாகம் படமும் வேற லெவலில் இருந்தது. இதில் ஸ்ரீலீலா ஒரு ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். அம்மன் தோற்றத்தில் அல்லு அர்ஜூன் ஆடிய நடனம் ரசிகர்களை பரவசப்படுத்தியது. சண்டை காட்சிகள் தரமான சம்பவங்களாக இருந்து ரசிகர்களை திக்முக்காடச் செய்தது. இயக்குனர் சுகுமாரன் தன்னை நிரூபித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

தியேட்டர்களில் மட்டுமின்றி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான புஷ்பா 2 படத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்து பார்த்தனர். ஓடிடியிலும் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இப்போது முன்னணி தமிழ் டிவி சேனலில் இந்த படம், வருகிற தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதியின்று ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவியில் தமிழ் புத்தாண்டு தினம் சிறப்பு நாளை முன்னிட்டு வருகிற 14ம் தேதியன்று பிற்பகல் 3 மணிக்கு புஷ்பா 2 படம் ஒளிபரப்பாகிறது. அதற்கான பிரமோ வீடியோவை விஜய் டிவியில் காட்டி வருகின்றனர். இதை பார்த்த ரசிகர்கள், புஷ்பா 2 படத்தை மீண்டும் ஒருமுறை காணும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். புஷ்பா 3 படமும் இன்னும் சில ஆண்டுகள் கழித்து வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்