- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 பக்கத்துல யாருமே வர முடியாதா? இந்தியில் வசூல், இந்தியாவில் வசூல், உலகளவில் மொத்த...

புஷ்பா 2 பக்கத்துல யாருமே வர முடியாதா? இந்தியில் வசூல், இந்தியாவில் வசூல், உலகளவில் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா? – இப்பவே கண்ணை கட்டுதே…

- Advertisement -

அதிரடி ஆக்சன் மசாலாத்தனங்கள் நிறைந்த படம்தான் புஷ்பா 2 என்பதில் படம் பார்த்த ரசிகர்களில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. செம்மர கடத்தல்காரன் கதாநாயகன், செம்மர கடத்தலை தடுக்க முயற்சிக்கும் போலீஸ் அதிகாரி வில்லன் என்ற முரண்பட்ட கோணத்தில் உருவான படம்தான் புஷ்பா.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, தற்போது கடந்த 5ம் தேதி புஷ்பா 2 படம் வெளியானது. இயக்குனர் சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா சுனில் பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம், ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே 275 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது.

- Advertisement -

முதல் நாளில் இந்தியில் 67.5 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தியில் வெளியான ஷாருக்கான் நடித்த ஜவான் படம்தான் முதல் நாளில் ரூ. 64 கோடி தான் வசூலித்த நிலையில் இந்தியில் முதல் நாளிலேயே அதிக வசூலித்த படமாக இருந்தது. பாலிவுட் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் புஷ்பா முதல் நாளில் 67.5 கோடி ரூபாய் வசூலித்து இந்தியில் பெரிய அளவில் கவனத்தை பெற்றது.

அதன் பிறகு புஷ்பா 25 நாட்களில் 1600 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்போதைய நிலவரப்படி உலக அளவில் புஷ்பா 2 படம் 1600 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இதில் இந்தியில் மட்டும் ரூ. 700 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்திய அளவில் புஷ்பா 2 படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் 1300 கோடியை கடந்துள்ளது. இதில் நிகர வசூலாக 1100 கோடி ரூபாயை அடைந்துள்ளது.

- Advertisement -

இந்த படம் வெளியாகி 25 நாட்கள் கடந்த பின்பும் தொடர்ந்து வசூல் மழை பொழிந்து வருகிறது. தமிழ் இந்தி மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த வாரங்களில் புதிய படங்கள் சில வெளிவந்த போதிலும் புஷ்பா 2 படத்தின் வசூலை அந்த படங்கள் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிறிஸ்மஸ் விடுமுறை நாளிலும் புஷ்பா 2 படத்துக்கு ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் நாளுக்கு நாள் புஷ்பா படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்திய அளவில் புஷ்பா 2 படம் வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில் அடுத்து எந்த படம் இப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றியை இவ்வளவு குறைவான நாட்களில் வசூல் சாதனை புரிய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் புஷ்பா 2 படம் தெலுங்கில் உருவான மசாலா தனங்கள் நிறைந்த படம் என்றாலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் தொடர்ந்து அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். அதே நேரத்தில் புஷ்பா 2 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில் குறித்த பரபரப்பும் நீடித்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்