- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் ரிலீஸ் - உலகம் முழுவதும் எத்தனை...

வரும் டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் ரிலீஸ் – உலகம் முழுவதும் எத்தனை ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது தெரியுமா? போட்றா வெடிய… பெரிய சம்பவமா இருக்குதே?

- Advertisement -

கடந்த 2021ம் ஆண்டில் டிசம்பர் 17ம் தேதி அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, சுனில், பகத்பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் புஷ்பா படம் வெளியானது. தெலுங்கில் வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து, புஷ்பா படம் தமிழ், கன்னடம், இந்தி என பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

எதிர்பார்த்ததை காட்டிலும் எல்லா மொழிகளிலும் புஷ்பா படத்துக்கு கிடைத்த அமோக ஆதரவும், வரவேற்பும் பல மடங்கு கொட்டிய வசூலும் பட தயாரிப்புக் குழுவுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. செம்மர கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில், அல்லு அர்ஜுன் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். ஆக்‌ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் சிறந்த நடிப்பை தந்த அல்லு அர்ஜுனனுக்கு மத்திய அரசு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கியது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து புஷ்பா படத்தின் 2ம் பாகம் உருவானது. இந்த படத்திலும் அல்லு அர்ஜுன் நாயகனாகவும், ராஸ்மிகா மந்தனா, நாயகியாகவும் நடித்துள்ளனர். சுனில் பகத் பாசில் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் 2ம் பாகத்திலும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி புஷ்பா 2 படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் படத்தின் சூட்டிங்கை முடிக்க முடியாததால் டிசம்பர் 6ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.

- Advertisement -

புஷ்பா 2 படத்தின் வியாபாரம் தற்போது 1000 கோடி ரூபாயை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளியிட 660 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்துள்ளதாகவும், நெட்பிளிக்ஸ் மற்றும் இசை உரிமை, சேட்டிலைட் ரைட்ஸ் உள்ளிட்ட வகையில் 1000 கோடி ரூபாய் வியாபாரத்தை கடந்திருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. புஷ்பா 2 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக 2 மாதங்களை ஒதுக்கியுள்ள நடிகர் அல்லு அர்ஜுன், இதற்காக 100 கோடி ரூபாய் வரை பட்ஜெட்டில் ஒதுக்கி இருப்பதாகவும் தகவல் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான தியேட்டர்களில் புஷ்பா 2 படத்தை வெளியிட உள்ளனர். மொத்தம் 11,500 தியேட்டர்களில் புஷ்பா 2 படத்தை திரையிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் 6500 தியேட்டர்கள், வெளிநாடுகளில் 3000 இடங்களில் உள்ள 5000 தியேட்டர்கள் என மொத்தம் 11,500 தியேட்டர்களில் புஷ்பா 2 படம் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்திய சினிமாவில் இதற்கு முன்பு வசூல் சாதனை புரிந்த சில படங்களின் வசூலை புஷ்பா 2 படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்