- Advertisement -
Homeபொழுதுபோக்குபருத்திவீரன் படம் விவகாரத்தில் புது திருப்பம், இயக்குர் அமீருக்கு பணத்தை திருப்பித் தர சூர்யா தரப்பு...

பருத்திவீரன் படம் விவகாரத்தில் புது திருப்பம், இயக்குர் அமீருக்கு பணத்தை திருப்பித் தர சூர்யா தரப்பு போட்ட கேவலமான பிளான் – ஆனால், அதுவும் அமீர் பணம்தானே?

- Advertisement -

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான படம் பருத்திவீரன். கடந்த 2007ம் ஆண்டில் வெளியான இந்த படம், 300 நாட்களுக்கு மேல் பல தியேட்டர்களில் ஓடியது. இந்த படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் சிவக்குமாரின் உறவினர். படத்தை துவங்கிய ஒரே மாதத்தில் படத்தை தொடர்ந்து தயாரிக்க முடியாது என ஞானவேல் ராஜா கூறி ஒதுங்கிய நிலையில், இயக்குநர் அமீர் தனது சொந்த பட நிறுவனம் மூலமாக பருத்திவீரன் படத்தை தயாரித்தார். இதற்காக நண்பர்கள், உறவினர்களிடம் பல லட்சம் ரூபாய் என கோடிக்கணக்கில் கடன் வாங்கி, படத்தை உருவாக்கினார்.

- Advertisement -

ஆனால் படம் முழுமையாக தயாரான பின், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் சிவக்குமார் தரப்பில் அமீரிடம் பேச்சு நடத்தி, படத்தை தயாரித்த அமீருக்கு அந்த தொகையை தருவதாக கூறி, படத்தை அவர்கள் தயாரிப்பாக மாற்றிக்கொண்டனர். இதில் சிவக்குமார் தரப்பில், அப்போதைய முதல்வர் கருணாநிதி பெயரை பயன்படுத்தி, அமீரை சம்மதிக்க வைத்துள்ளனர். ஆனால் பேசியபடி அமீருக்கு அவர்கள் ஒரு ரூபாய் கூட திருப்பித் தரவில்லை.

கோடிக்கணக்கில் அமீர் செலவு செய்து உழைத்து உருவாக்கிய பருத்திவீரன் படத்தை ஏமாற்றி அபகரித்து கொண்டதால், அமீர் சென்னை கோா்ட்டில் வழக்கு தொடர்ந்து 17 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குர் அமீர் குறித்து தரக்குறைவாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

இதற்கு இயக்குநர்கள் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், சேரன் உள்ளிட்டோர் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், ஞானவேல்ராஜா, வருத்தம் தெரிவித்து ஒதுங்கிக்கொண்டார். இந்நிலையில், அமீருக்கு திருப்பித் தர வேண்டிய பணத்துக்காக, சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஞானவேல்ராஜா தரப்பு ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

அதாவது பருத்திவீரன் படம் மீண்டும் புதிய தொழில்நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. எவர்கிரீன் படமான இது, நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்பதால், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்து அமீருக்கும் ஒரு தொகை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால், இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளர் அமீர்தான். ஏனெனில் இதுவரை அந்த படத்தின் தயாரிப்பு தொகையை அமீருக்கு தரவில்லை. அப்படிப்பட்ட சூழலில் பருத்திவீரன் படத்தை ரி ரிலீஸ் செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயும் அமீருக்கு சொந்தமானதுதான். இது அவர் பணத்தை அவருக்கே திருப்பி தருவது போன்றதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்