- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயை பற்றி நான் அப்படி பேசினேனா? மறுப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் -...

நடிகர் விஜயை பற்றி நான் அப்படி பேசினேனா? மறுப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் – உண்மையில் நடந்தது குறித்து அவரே தந்த விளக்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது அவர் நடிப்பில் வெளிவந்துள்ள தி கோட் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஐந்து நாட்களில் 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும், ஆதரவும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

நடிகர் விஜய் நடத்தும் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடப்பதாக இருந்த நிலையில், அந்த மாநாடு குறிபிட்ட அந்த தேதியில் நடக்காது என்ற தகவல் பரவி வருகிறது. இதற்கு காரணம் போலீஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளும்தான் முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

எனினும் மிக விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நடிகர் விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த சூழ்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் விஜய் குறித்து தவறாக பேசியதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

மன்சூரலிகான் நடிகர் விஜய் நடித்த பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட நடிகர் விஜய் நடித்த லியோ படத்தில் மன்சூர் அலிகான் மிக முக்கியமான கேரக்டர் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் குறித்து அவர் தவறாக பேசினாரா என்பது பற்றிய கேள்வி பரவி வருகிறது.

அதாவது சினிமாவை கெடுப்பதற்காக தான் சிலர் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள் என்று மன்சூர் அலிகான் பேசியதாகவும் சமீபத்தில் தான் நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கி கட்சிக்கொடி அறிமுகப்படுத்திய நிலையில் இவ்வாறு மன்சூர் அலிகான் பேசியது நடிகர் விஜய் சுட்டிக்காட்டி விமர்சித்து பேசியதாக தகவல் பரவியது. சமீபத்தில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது, இவ்வாறு பேசியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து விளக்கம் தந்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார் அவரை போலவே, அரசியல் வருபவர்களின் புகழை கெடுப்பதற்காக மோகன்லால் மம்முட்டி போன்றவர்கள் அரசியல் வருவதை தடுப்பதற்காகவே, சினிமாக்காரர்கள் மீது அவதூறு பாலியல் புகார் பரப்புகிறார்கள் என்று தான் நான் பேசினேன். அதை சிலர் மாற்றி விஜயை நான் தாக்கி பேசியதாக கூறியிருக்கிறார்கள் அப்படி நான் அந்த பேட்டியில் சொல்லவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.

சற்று முன்