- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து வாழ்த்து குறிப்பு மட்டுமே வெளியிடும் தமிழக வெற்றிக் கழகம்... விஜய்க்கு பதில் "தளபதி பெயர்...

தொடர்ந்து வாழ்த்து குறிப்பு மட்டுமே வெளியிடும் தமிழக வெற்றிக் கழகம்… விஜய்க்கு பதில் “தளபதி பெயர் உடையோரே” எனக் குறிப்பிடும் புஸ்ஸி ஆனந்த்… ட்ரோல் மெட்டீரியல் ஆகிறதா விஜய் கட்சி…

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாருமே எதிர்பாராத நேரத்தில், அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் தளபதி விஜய். தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே வசூல் சக்கரவர்த்தியாகவும் சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வரும் விஜய் திடீரென அரசியல் கட்சி தொடங்குவதாக வெளியான அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது.

 

ஒரே நாளில் அவரது உதவியாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில், கட்சியின் பெயரை பதிவு செய்ய இங்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் தளபதி விஜய். அதில், மதவாத சக்திகளுக்கு எதிராக போராட போவதாக தெரிவித்து இருந்தார். அரசியலில் ஆழம் மட்டுமல்ல நீள அகலத்தையும் தான் பார்த்திருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டு இருந்தார்.

 

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தனது இலக்கு என்றும் தெரிவித்து இருந்தார் விஜய். இது மட்டுமல்லாமல், சினிமாவுக்கும் முழுக்கு போடுவதாக அவர் அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

 

தற்போது வெங்கட் பிரபுவின் கோட் படத்தின் நடித்து வரும் அவர், அடுத்ததாக ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்து இருந்தார். அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு அவர், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். ஆனால் பெரிதாக இதுவரை விஜய் எந்த ஒரு மூவ்மெண்ட்டும் எடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

குறிப்பாக கடந்த சில நாட்களாகவே வாழ்த்து குறிப்பு மட்டும் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பவன் கல்யாண்க்கு வாழ்த்து, சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து, சீமானுக்கு வாழ்த்து என அடுக்கிக் கொண்டே செல்கிறது தமிழக வெற்றிக்கழகம். இதனைப் பார்த்த சிலர், இது தமிழக வெற்றிக்கழகமா இல்லை தமிழக வாழ்த்து கழகமா என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.

 

இது ஒரு பக்கம் இருக்க பொது நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் தன்னால் முடிந்த அளவுக்கு காமெடி பண்ணி வருகிறார். சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் விஜயின் பெயரை குறிப்பிடாமல் தளபதி பெயரை உடையோரே என்று பேசியது அங்கிருந்தவர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாமல் செய்தியாளரிடம் பேசும்போது மோடியின் வெற்றி குறித்து தமிழக வெற்றி கழகம் சொல்வது என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விஜய் பதில் கூறுவார் என்று சொன்னதையே சொல்லி வெறுப்படையச் செய்தார் ஆனந்த். இப்படி சமூக வலைதளங்களில் சில நாட்களாக கிண்டலுக்கு ஆளாகும் தமிழக வெற்றிக்கழகம், வருங்காலத்தில் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சற்று முன்