- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பட இயக்குனர் எச் வினோத்துக்கு நடிகர் தனுஷ் போட்ட கண்டிஷன் - ஆனா அதுக்கு...

விஜய் பட இயக்குனர் எச் வினோத்துக்கு நடிகர் தனுஷ் போட்ட கண்டிஷன் – ஆனா அதுக்கு முன்னாடி விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?

- Advertisement -

தி கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இப்போது எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இம்மாதம் 5ம் தேதி கேரள மாநிலம் பையனூரில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது. பாடல் காட்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், அதன்பிறகு தற்போது வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

வருகிற 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஒன்றரை லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடிகர் விஜய் பேச இருக்கிறார். இந்த மாநாட்டில்தான் தனது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் அரசியலில் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து நடிகர் விஜய் விரிவாக பேச இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 69 படம்தான் அவரது கடைசி படம் என்பது ஏற்கனவே விஜய் அறிவித்துவிட்டார். அதனால் எந்த விதமான கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் இல்லாமல் ப்ரீயாக படப்பிடிப்பு நடத்துமாறு இயக்குனர் எச் வினோத்திடம் விஜய் கூறிவிட்டார். தளபதி 69 படம் அடுத்த ஆண்டு அக்டோபர்தான் ரிலீஸ் ஆகிறது. அதனால் இன்னும் 12 மாதங்கள் கால அவகாசம் இருப்பதால் எந்தவிதமான டென்ஷனும், பரபரப்பும் இல்லாமல் மிதமான வேகத்தில் படப்பிடிப்பை நடத்துங்கள் என்று விஜய் கூறியிருக்கிறார்.

ஆனால் விஜய் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் எச். வினோத் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க கமிட்டாகி இருக்கிறார். நடிகர் தனுஷ் இப்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சில படங்களை அவரே டைரக்‌ஷனும் செய்து வருகிறார். அதனால் அவருக்கு அடுத்தடுத்த பணிகள் தொடர்ந்து இருப்பதால் மிகவும் பிஸியாக காணப்படுகிறார்.

- Advertisement -

அதனால், தளபதி 69 விஜய் நடிக்கும்படத்தை முடித்தவுடன் நீங்கள் உடனே என்னிடம் வந்து கால்ஷீட் கேட்டால் என்னால் தர முடியாது. ஏனென்றால் ஏற்கனவே நிறைய படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறேன். டைரக்டர் பணியும் தொடர்கிறது. அதனால் 3 மாதங்களுக்கு முன்னதாகவே நீங்கள் எனக்கு, படப்பிடிப்பு துவங்கும் நாள் குறித்தும், தேவைப்படும் என்னுடைய கால்ஷீட் குறித்தும் சொல்லி விடுங்கள்.

அதற்கேற்ப நான் நடிக்க வேண்டிய படங்களை முடித்துக் கொண்டும், மீதமுள்ள படப்பிடிப்புகளை திட்டமிட்டுக் கொண்டும் உங்கள் படத்தில் நடிக்க வருகிறேன் என்று தனுஷ் கண்டிஷனாக கூறியிருக்கிறார். விஜயை பொருத்தவரை படப்பிடிப்பை நிதானமாக நடத்துங்கள் என்ற கண்டிஷனில் இருக்கிறார், தனுஷை பொருத்தவரை 3 மாதங்களுக்கு முன்பே எனக்கு படப்பிடிப்பு குறித்து சொல்லி விடுங்கள் என்ற கண்டிஷன் போட்டிருக்கிறார் இதனால் எச் வினோத் தடுமாற்றத்தில் இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்