- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜாவுக்கு இருந்த திமிர் பிடித்ததால் என்னுடைய திமிரை நான் காட்டினேன், அதுதான் விஜயகாந்த் நடித்த அந்த...

இளையராஜாவுக்கு இருந்த திமிர் பிடித்ததால் என்னுடைய திமிரை நான் காட்டினேன், அதுதான் விஜயகாந்த் நடித்த அந்த படம் – இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் கூறியதாவது, இளையராஜா சார் 7 டியூனை இசையமைத்து வைத்திருந்தார். கிரியேட்டராக அத்தனையும் ஹிட் அடிக்கும் என்ற முழு நம்பிக்கையில் அவர் இருந்தார். அதை ஒரே படத்துக்கு தான் கொடுப்பேன் என்பதிலும் உறுதியாக இருந்தார். இயக்குனர் பாலு மகேந்திரா உட்பட முன்னணி இயக்குனர்கள் கேட்டும் கூட தனியாக ஒரு டியூனை மட்டும் தர மறுத்துவிட்டார். அவரது இந்த தொழில் திமிர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இதைக் கேட்டதும் எழுத்தாளராக எனக்குள் இருந்த திமிரால் வெறும் டியூனுக்காக நான் தயார் செய்து இயக்கிய கதை தான் வைதேகி காத்திருந்தாள் படம் என்று இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.

சற்று முன்