- Advertisement -
Homeபொழுதுபோக்குஉனக்கு ஏன் இப்படி ஒரு குரூர புத்தி? சேது படம் பார்த்துவிட்டு அப்படி ஒரு கேள்வியை...

உனக்கு ஏன் இப்படி ஒரு குரூர புத்தி? சேது படம் பார்த்துவிட்டு அப்படி ஒரு கேள்வியை கேட்ட இயக்குனர் பாலு மகேந்திரா – அதற்கு இயக்குனர் பாலா சொன்ன பதில்!

- Advertisement -

இயக்குனர் பாலா, சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1999ம் ஆண்டில் வௌியான இந்த படத்தில் ஹீரோ விக்ரம் கல்லூரியில் ரவுடியாக இருப்பார். ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார். அவரது காதலியாக அபிதா நடித்திருந்தார். இயக்குனர் பாலா, இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தவர்.

சேது படம் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணவில் இயக்குனர் பாலா கூறியதாவது, பாலு மகேந்திரா சேது படம் பார்த்த போது யூனிட் ஆட்கள் எல்லாம் வெளியே இருந்தார்கள். அதனால் சபைக்காக அவர், நல்ல வேளைடா, எங்கே இந்த படத்தை பார்க்காம முன்னாலயே நான் இறந்து போய்விடுவேனோ என்னமோ என நினைத்தேன் என்றார். பிறகு எல்லோரும் போன பிறகு என்னை தனியாக அவரது ஆபிஸ்க்கு அழைத்தார்.

- Advertisement -

அப்போது என்னிடம், பாலா ஏண்டா உனக்கு இப்படி ஒரு குரூர புத்தி, அந்த பிராமண பொண்ணு காலேஜ்ல கஷ்டப்பட்டு வந்து படிக்குது, அங்கு ஒரு ரவுடி பையன் இருக்கான். அந்த பொண்ணை மெரட்டி லவ் பண்ண வைக்கிறான். அப்புறம் அவனுக்கு ஏதோ ஆக்ஸிடென்ட் ஆகி அவன் பைத்தியம் ஆகிறான்.

அந்த பொண்ணை கட்டிக்க ஏற்கனவே மொறை பையனும் ஒருத்தன் இருக்கான். அப்படி இருக்கும்போது அந்த பொண்ணை வாழ வைக்கிறது தானடா சரி. இப்போ தான் வாழ்க்கையும் கெடுத்து அந்த பொண்ணு வாழ்க்கையும் கெடுத்து அந்த இன்னொருத்தன் வாழ்க்கையும் கெடுத்து கடைசியில் அவனை பைத்தியக்காரனாகவே கொண்டு சேர்க்கிறயே,

- Advertisement -

எப்படி உனக்கு இப்படி குரூரமா சிந்திக்க வருது. அந்த ஹீரோயின் கேரக்டர் நீ பெத்த பொண்ணு, நீயே அதை கழுத்தை நெறிச்சு கொன்னுடுவியா என்று கேட்டார். ஏன் இப்படி நடத்துக்கறே என்று ரொம்பவும் கோபமாக பேசினார்.

நான் உங்க அளவுக்கு மென்மையானவன் இல்லே. எனக்கு இப்படிதான் தோணுது, எனக்கு தெரிஞ்சதை தானே பண்ண முடியும். உங்களை மாதிரியே நான் செய்தால், உங்களை மாதிரி செய்ய அதுதான் நீங்களே இருக்கீங்களே, நான் எதற்கு என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை என்று இயக்குனர் பாலா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்