சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட நடிகைகளில் மிக முக்கியமானவர் ராஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது தமிழ் தெலுங்கு கன்னடத்தை தாண்டி ஹிந்தி திரையுலகிலும் கால் பதித்து விட்டார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இங்கு இருக்கிறது என்று கூறலாம். அந்த அளவுக்கு முன்னணி கதாநாயகியாக உருவாகிவிட்டார் ராஷ்மிகா மந்தனா.
தற்போது புகழின் உச்சியில் இருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு அடித்தளமாக அமைந்த திரைப்படம் கீதா கோவிந்தம். விஜய தேவரகொண்டா நடிப்பில் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியானது. குஷி திரைப்படத்தைப் போன்றே இதுவும், சாதாரண கதையை மிக சுவாரசியமாக கூறியிருந்தது.
இதன் காரணமாகவே கீதா கோவிந்தம் தெலுங்கு மொழியை கடந்து பிற மாநிலங்களிலும் பேசப்பட்டது. அதற்கு இன்கம் இன்கம் காவாலே பாடலும் மிக முக்கியமான காரணம் என்று கூறலாம். இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா தமிழிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார். கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்த அவர், வாரிசு படத்தின் மூலம் விஜயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இருப்பினும் ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது புஷ்பா படம் தான். முதல் பாகத்திலும் சரி இரண்டாவது பாகத்திலும் சரி ஸ்ரீவள்ளி என்னும் ராஷ்மிகாவின் கேரக்டருக்கு அழுத்தமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அவரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
பான் இந்தியா திரைப்படமாக புஷ்பா பேமஸ் ஆனதால், ராஷ்மிகா மந்தனாவும் அந்த லெவலுக்கு கொண்டாடப்பட்டார். ஹிந்தியில் அனிமல் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர் தற்போது அங்கு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சாவா படத்திலும் கதாநாயகியாக வருகிறார். தற்போது அவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
புஷ்பா படத்திற்கு முன்பு நான்கு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த அவர், தற்போது பான் இந்தியா நடிகையாக மாறி இருப்பதால் ஊதியத்தை உயர்த்தி இருக்கிறார். படங்களை கடந்து ஏராளமான விளம்பரங்களிலும் வருகிறார் ராஷ்மிகா. பெங்களூரில் 8 கோடி ரூபாய்க்கு ஒரு சொகுசு பங்களாவையும், மும்பை கோவா ஹைதராபாத்தில் சொத்துக்களையும் அவர் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. பல சொகுசு கார்களையும் வைத்திருக்கும் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு 66 கோடி ரூபாயாக இருக்கலாம் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.





