- Advertisement -
Homeபொழுதுபோக்குராகவா லாரன்ஸ் திரைப்படத்தில் இணையும் முக்கியமான இரண்டு பிரபலங்கள்... ஒருத்தரு வில்லன்... இன்னொருத்தரு வில்லாதி வில்லன்......

ராகவா லாரன்ஸ் திரைப்படத்தில் இணையும் முக்கியமான இரண்டு பிரபலங்கள்… ஒருத்தரு வில்லன்… இன்னொருத்தரு வில்லாதி வில்லன்… அப்படின்னா திரையரங்குகள் தெறிக்கப் போவது உறுதி…

- Advertisement -

ஆரம்ப காலகட்டத்தில் நடன இயக்குனராக இருந்த ராகவா லாரன்ஸ், பிறகு நடிகராக அறிமுகமானார். பார்த்தாலே பரவசம், பாண்டி, அற்புதம் என ராகவா லாரன்ஸ் நடித்த அத்தனை திரைப்படங்களும் தோல்வியை சந்தித்தன. இதனால், இயக்கத்தின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ராகவா லாரன்ஸ். அதேசமயம் வேறு ஒரு நடிகர் இல்லாமல் அவரே நடிக்கவும் செய்தார்.

 

- Advertisement -

இப்படியாக தமிழில் அவரது இயக்கத்தில் முதல்முறையாக வெளிவந்தது முனி திரைப்படம். ஹாரர் திரைப்படத்தில் நகைச்சுவையை புகுத்தினால் எப்படி இருக்கும் என்ற கான்செப்ட்டை, அவர்தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொண்டு வந்தார். இது மிகச் சரியாகவும் கிளிக் ஆனது.

 

- Advertisement -

இந்த ஃபார்முலாவையே காஞ்சனா திரைப்படத்திற்காக அவர் பயன்படுத்தினார். இதில் எதிர்பாராத வெற்றியை ருசித்தார் ராகவா லாரன்ஸ். அந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும், வசூல் மழை குவித்தன. இயக்கத்தின் கில்லி என்று பெயர் எடுக்க ஆரம்பித்தார் ராகவா லாரன்ஸ். ஆனால் அவருக்கு காஞ்சனா 3 திரைப்படம் கை கொடுக்கவில்லை.

 

இதனிடையே பிற இயக்குனர்கள் திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்க ஆரம்பித்தார். மொட்ட சிவா கெட்ட சிவா, சந்திரமுகி பார்ட் 2 திரைப்படங்களில் அவர் நடித்தார். ஆனால் இந்த திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்தன. அதுமட்டுமல்லாமல் ராகவா லாரன்ஸின் மார்க்கெட்டும் ஒரு ஆட்டம் கண்டன.

 

இந்த நேரத்தில்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் நடிக்கும் வாய்ப்பு ராகவா லாரன்ஸ் கிடைத்தது. ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தில், அசால்ட் செய்து கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்க வைக்க கார்த்திக் சுப்புராஜ் முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போனது. இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்த, படமும் ஹிட்டானது.

 

தற்போது ராகவா லாரன்ஸ் பென்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை, பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ரெமோ, சுல்தான் ஆகிய திரைப்படங்களை எடுத்துள்ளார். இந்த நிலையில் புதிய தகவலாக, பென்ஸ் திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்