- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை போய் பாருங்க, வாழ்க்கையில் பெரிய மாற்றம் கிடைக்கும் - எனக்கு கிடைச்சுது, ரசிகர்களுக்கு...

அவரை போய் பாருங்க, வாழ்க்கையில் பெரிய மாற்றம் கிடைக்கும் – எனக்கு கிடைச்சுது, ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, கடந்த அக்டோபர் 29ம் தேதி என்னோட பிறந்த நாள். நானும் குடும்பத்தோடு திருவண்ணாமலை போனேன். ரமண மகரிஷி ஆசிரமம் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் பார்த்துட்டு வெளியே வரும்போது ஒரு சின்ன பையன் கையில் ஒரு போட்டோ கொடுத்து முடிஞ்சா இந்த கோவில் போங்கன்னு சொன்னார். அந்த சித்தரை அடுத்த முறை பார்க்கலாம் என்று கிரிவலம் சுத்தி வந்தோம். இன்னொருத்தர் அதே சாமியார் போட்டா என்னிடம் காட்டுகிறார். 2வது முறை பெரிய போட்டோவா வருது. சாமி நம்மள வந்து பார்க்க சொல்றார்ன்னு நினைச்சு போனேன். மௌன சாமியார் அவர் பெயர். அதனால் ஜீவசமாதியாக இருப்பார் என்று போய் பார்த்தால் அவர் உயிரோடு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அங்க உட்கார்ந்து அஞ்சு நிமிஷம் தியானம் பண்ணினேன். அவர் கண் பார்வை பார்த்ததில் மனசுக்கு இனம் புரியாத சந்தோஷம். நீங்களும் குடும்பத்தோடு போனால் அவரை பார்த்துட்டு ஆசீர்வாதம் வாங்குங்க என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

சற்று முன்