- Advertisement -
Homeபொழுதுபோக்குஜேசன் சஞ்சயை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கும் சினிமா வாரிசு - அப்பா...

ஜேசன் சஞ்சயை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கும் சினிமா வாரிசு – அப்பா பெயரை மகள் காப்பாற்றுவாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பெரும்பாலான ஹீரோ நடிகர்களின் மகன்கள் சினிமாவில் ஹீரோவாக தான் அறிமுகமாகி உள்ளனர். அந்த வரிசையில் விதிவிலக்காக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஒரு ஹீரோவாக நடிப்பதற்கான எல்லா அம்சங்களும் அவரிடம் காணப்பட்டும் அவர் ஹீரோவாக விரும்பவில்லை.

தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் அவர் இயக்கிய சிம்கா படம் வருகிற ஜூலை 31ம் தேதி ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் திரைப்பட இயக்கம் தொடர்பான படிப்புகளை படித்து முடித்த ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கிய அனுபவம் மூலமாகவே நேரடியாக திரைப்பட இயக்குனராக களத்தில் இறங்கி இருக்கிறார்.

- Advertisement -

அவர் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவம் இல்லாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது ஜேசன் சஞ்சயை போலவே மேலும் ஒரு வாரிசு சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் திரைப்பட நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் மற்றும் நடன இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸின் மகள் ராகவி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸின் மகள் ராகவி அமெரிக்காவில் திரைப்பட இயக்கம் குறித்த படிப்புகளை படித்து முடித்து இருக்கிறார். அவரும் எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குனராக பணி புரியாமல் நேரடியாக இயக்குனராக களத்தில் இறங்கியுள்ளார்

- Advertisement -

அவர் தனது முதல் படத்தை இயக்க தயாரான நிலையில் அதற்கான லொக்கேஷன் பார்க்கும் பணிகள் இப்போது வேகமாக நடந்து வருகின்றன. ராகவி டைரக்ட் செய்யும் முதல் படத்தை தயாரிப்பது வேறு யாரும் அல்ல. அவருடைய அப்பா ராகவா லாரன்ஸ் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அவர் திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் தனது மகள் ராகவி இயக்கும் படத்தையும் அவரே தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகள் ராகவி எதிர்காலத்தில் தனது அப்பா பெயரை காப்பாற்றுவாரா, அவரும் ஒரு பெரிய இயக்குனராக வலம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்