- Advertisement -
Homeபொழுதுபோக்குநேற்று வெளியான தக்லைஃப் படத்தில் அந்த பிரபல நடிகரின் மகள் நடித்திருக்கிறாரா? - வெளியான ஆச்சரிய...

நேற்று வெளியான தக்லைஃப் படத்தில் அந்த பிரபல நடிகரின் மகள் நடித்திருக்கிறாரா? – வெளியான ஆச்சரிய தகவல்!

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் தக்லைஃப் படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் நடிகர் சிம்பு முதன் முறையாக கமலுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் அசோக் செல்வன் ஜோஜூ ஜார்ஜ் நாசர் திரிஷா அபிராமி உள்ளிட்டோரும் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

நாயகன் படம் போல மீண்டும் மாஸ் ஹிட் படமாக வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தக்லைஃப் படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. கமல் மற்றும் சிம்புவின் நடிப்பு, மாஸ்டர் அன்பறிவ் அமைத்த விறுவிறுப்பான சண்டை காட்சிகள் தவிர படம் எந்த விதத்திலும் ரசிகர்களை கவரவில்லை. இந்தியன் 2 போல கமலுக்கு இதுவும் ஒரு பிளாப் படம்தான்.

- Advertisement -

தக்லைஃப் படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள், இது மணிரத்னம் டைரக்ட் செய்த படம்தானா என்று சந்தேகப்படுவதாக விமர்சனம் செய்திருக்கின்றனர். அந்தளவுக்கு மந்தமான ஒரு திரைக்கதையில் எந்தவிதமான சுவாரசியமும் இல்லாத திரைக்கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. வழக்கமான மணிரத்னம் படங்களின் கூர்மையான வசனங்கள் கூட இதில் மிஸ்ஸிங் என்று கூறப்படுகிறது.

நேற்று முதல் நாளில் தக்லைஃப் படத்தின் தமிழ்நாட்டு அளவில் வசூல் என்பது 18 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. 2வது நாளில் இன்று பல தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டத்தையே காண முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை சனி ஞாயிறு தினங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக தக்லைஃப் படம் பெரிய அளவில் சாதிக்காது என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தக்லைஃப் படத்தில் நடித்த 2 நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. லப்பர் பந்து படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு காதலியாக நடித்த சஞ்சனா, இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிசெய்திருக்கிறார். மேலும் படத்தில் சில காட்சிகளிலும் அவர் நடித்திருக்கிறார். அதே போல் நடிகர் ரகுமானின் மகள் இந்த படத்தில் நடிகர் நாசரின் மகளாக நடித்திருக்கிறார்.

நடிகர் ரகுமான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு நடிகர். நிலவே மலரே புதுப்புது அர்த்தங்கள் புரியாத புதிர் ராம் சிங்கம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தக்லைஃப் படத்தில் ரகுமானின் மகளும் நாசரின் மகள் கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமாகி விட்டார். ஏஆர் ரகுமானின் நெருங்கிய உறவினர் ரகுமான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்