- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயை அரசியலுக்கு வரச் சொன்னதே ராகுல் காந்திதான், முன்னாள் எம்எல்ஏ சொல்வது உண்மையா… உருட்டான்னு...

நடிகர் விஜயை அரசியலுக்கு வரச் சொன்னதே ராகுல் காந்திதான், முன்னாள் எம்எல்ஏ சொல்வது உண்மையா… உருட்டான்னு தெரியலையே?

- Advertisement -

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் மகிழ்ச்சியும், வரவேற்புமே தெரிவித்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், சினிமாவில் உச்ச நடிகராக ஒரு படத்தில் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும்போதே அவர் சினிமா வேண்டாம் என உதறிவிட்டு அரசியலுக்கு வருவதுதான். அதுவும் அவரது பேச்சும், நடவடிக்கைகளும் மக்களுக்கு பிடித்தும் இருக்கின்றன.

தமிழக மக்கள் மீது தீராத அன்பும், பாசமும் கொண்டிருக்கிறேன் என மேடைக்கு மேடை பேசிய ரஜினிகாந்த், 73 வயதிலும் இப்போது ஓய்வில்லாமல் நடித்து நூற்றுக்கணக்கான கோடிகளில் தனது குடும்பத்துக்கு, வாரிசுகளுக்கு சொத்து சேர்க்கிறாரே தவிர, தமிழக மக்களின் நலன்காக்க அவருக்கு எந்த அக்கறையும் இல்லை என்ற விமர்சனமும் இருந்து வருகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர முக்கிய காரணம், அவரது படங்கள் ரிலீஸ் காலகட்டத்தில் திமுக கட்சியினர் தரப்பில் ஏற்பட்ட சில குறுக்கீடுகளும், இடையூறுகளும்தான் என்று கூறப்படுகிறது. எனினும் ஒரு தலைவனாக தமிழகத்தை வழிநடத்திச் செல்ல அவர் முன்வந்திருப்பது பெரிய அளவில் பாராட்டை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரக் காரணம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் என்ற ஒரு தகவல் இப்போது வெளிவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி ஒரு நேர்காணலில் பேசுகையில், ஒருமுறை நடிகர் விஜய், ராகுலை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு தனக்கு வழங்கும்படி விஜய் அவரிடம் கேட்டார்.

அப்போது ராகுல்காந்தி, சினிமாவில் நீங்கள் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக இருக்கறீர்கள். உங்களுக்கு பின்னால் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நீங்கள் ஏன் காங்கிரஸில் ஒரு பொறுப்பில் இருக்க வேண்டும். நீங்களே தனியாக கட்சி ஒன்றை துவங்கலாமே என்று கூறியிருந்தார். அந்த யோசனையை கேட்டுதான், நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி இருக்கிறார் என்று விஜயதாரணி கூறியிருக்கிறார்.

இவர் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் செல்வாக்கு காரணமாக, ஒருவேளை ராகுலிடம் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது இந்த கருத்தை அவர் சொல்லியிருக்கலாம். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் பதவி வேண்டும் என்று விஜய் கேட்டாரா என்பதிலும் சந்தேகமே இருக்கிறது. ஏனெனில் தமிழத்தில் திமுக கூட்டணி ஆதரவில்தான் காங்கிரஸ் கட்சி வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கிறது என்பது விஜய் அறியாதது அல்ல என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

சற்று முன்