- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபத்தில் இருக்கும் ரஜினிகாந்த்... அதற்கு இதுதான் காரணமா... என்னடா இது...

லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபத்தில் இருக்கும் ரஜினிகாந்த்… அதற்கு இதுதான் காரணமா… என்னடா இது லியோ இயக்குனருக்கு வந்த சோதனை…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ரஜினிகாந்தின் கூலியும் ஒன்று. மாநகரம் முதல் லியோ வரை வசூல் ரீதியாக வெற்றியை மட்டுமே பரிசளித்து வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இதனை எடுக்கிறார். இதற்கான அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியானது.

 

ரஜினிகாந்தின் பழைய திரைப்படத்தின் முக்கியமான டயலாக் ஒன்று வீடியோவில் இடம் பெற்று இருந்தது. அதுபோக அனிருத் இசையும் வீடியோவில் துள்ளலாக இருந்ததால் அதனை ரிப்பீட் மோடில் ரசிகர்கள் பார்த்து வந்தனர். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. அது மட்டுமல்லாமல் படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கதாபாத்திரத்தையும் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கிறாராம். இப்படி ஏராளமான ஆச்சரியங்கள் படத்தில் உள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 

அதுமட்டுமல்லாமல் தனது வழக்கமான பார்முலாவை மாற்றி இந்த முறை சோதனை முயற்சியாக பல புதிய விஷயங்களை லோகேஷ் கனகராஜ் புகுத்த இருக்கிறார். கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக சத்யராஜ் நடிக்கிறார். இதுபோக ஸ்ருதிஹாசன், பகத் பாசில் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது ஒரு பக்கம் இருக்க, படத்தின் சூட்டிங் மட்டும் தள்ளிக் கொண்டே போகிறது. தேர்தல் முடிந்த பிறகு ஜூன் இரண்டாவது வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் தான் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் ஸ்கிரிப்ட் எழுதி வருவதால், இந்த தாமதம் என்று தெரிகிறது.

 

இதனால் இயக்குனர் மீது ரஜினிகாந்த் செம கடுப்பில் இருக்கிறாராம். கூலி படத்தில் நடித்து முடிப்பதற்காக தான் அவர் விரைவாக வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க கூறி இருந்தாராம். ஆனால் தற்போது, கூலி திரைப்படத்தின் சூட்டிங் தாமதமாவது ரஜினிகாந்தை அதிருப்தி அடையச் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஸ்கிரிப்டை முழுமையாக படித்த பிறகு தான் நடிப்பேன் என்று லோகேஷிடம் ரஜினி தெரிவித்துவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சற்று முன்